8வது ஊதியக்குழு.. ஆசையாக இருந்த அரசு ஊழியர்களுக்கு.. மத்திய அரசு வைத்த ஆப்பு!

  • சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 8வது ஊதியக்குழுவின் செயல்பாடுகள் குறித்த ஒரு முக்கிய தகவலை மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது.

    Advertisement

    8வது ஊதியக்குழு தனது பணிகள் மற்றும் பரிந்துரைகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்த எந்தவொரு இடைக்கால முன்னேற்ற அறிக்கையையும் மத்திய அரசுக்கு தொடர்ந்து வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி

    மாநிலங்களவையில் உறுப்பினர் ஜாவேத் அலி கான், 8வது ஊதியக்குழுவின் செயல்பாடுகள் குறித்து சில முக்கிய கேள்விகளை எழுப்பினார். அவர் கேட்ட கேள்விகள்..

    1. 8வது ஊதியக்குழு இதுவரை எத்தனை கூட்டங்களை நடத்தியுள்ளது?
    2. இதுவரை கலந்தாலோசிக்கப்பட்ட ஊழியர் சங்கங்களின் விவரங்கள் என்னென்ன?
    3. ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபேக்டரை கணக்கிட, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பெற்றோரை சேர்த்து 3-லிருந்து 5 ஆக உயர்த்த வேண்டும் என ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனவா?
    4. இக்கோரிக்கை உண்மை எனில், அதற்கு ஊதியக்குழு மற்றும் அரசின் பதில் என்ன?
    5. ஊதியக்குழு தனது இறுதி அறிக்கையை எப்போது அரசிடம் சமர்ப்பிக்கும்?

    Advertisement

    இந்த கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி, 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த நெறிமுறைகளின்படி, தனது கலந்தாலோசனை முறைகள் மற்றும் நடைமுறைகளை ஊதியக்குழுவே சுயமாக தீர்மானித்துக் கொள்ள முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே, கூட்டங்கள், பரிசீலிக்கப்படும் பரிந்துரைகளின் தன்மை அல்லது கலந்தாலோசனை முறைகள் குறித்த தகவல்களை அவ்வப்போது அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஊதியக்குழுவிற்கு இல்லை.. அவர்களுக்கு எங்களுக்கு அப்டேட் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.. என்று தெளிவாகக் கூறினார்.

    அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும்?

    8வது ஊதியக்குழு எப்போது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், அரசாணை வெளியீடு செய்யப்பட்ட நவம்பர் 3, 2025 தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை ஊதியக்குழு அரசிடம் வழங்கும், என்று குறிப்பிட்டார்.

    Advertisement

    8வது ஊதியக்குழு தற்சமயம் நாட்டின் பல்வேறு நகரங்களில் நேரடியாகச் சென்று பல்வேறு தரப்பினருடனும் ஊழியர் அமைப்புகளுடனும் கலந்தாலோசனை நடத்தி வருகிறது. இதற்கான அனைத்து சமீபத்திய விவரங்களும் அதற்கென உள்ள பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

    8வது ஊதியக்குழுவின் கூட்டங்கள்

    டெல்லி கூட்டம்: ஆகஸ்ட் 7 மற்றும் ஆகஸ்ட் 10, 2026 (விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 31, 2026)
    சென்னை கூட்டம்: செப்டம்பர் 8, 2026 (விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 18, 2026)
    புதுச்சேரி கூட்டம்: செப்டம்பர் 9, 2026 (விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 18, 2026)

    Advertisement

    மத்திய அரசு நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள் ஊதியக்குழுவின் உறுப்பினர்களை நேரில் சந்தித்துத் தங்களது கோரிக்கைகளை முன்வைக்கலாம்.

    நேரில் சந்திக்க விரும்பும் அமைப்புகள், குறிப்பிடப்பட்டுள்ள கடைசி தேதிக்கு முன்பாகவே முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    English Summary

    8th Pay Commission Update: No Obligation to Give Progress Reports says Govt