96 பட ஜானு கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவரா? நயன்தாரா, சமந்தா தவறவிட்ட சூப்பர் ஹிட் சான்ஸ்கள்

  • சென்னை: சினிமாவில் ஒரு படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்போது, அதில் நடித்த ஹீரோயின்களுக்கு அது ஒரு மிகப்பெரிய அடையாளத்தை தேடித்தருகிறது. ஆனால், அந்த கேரக்டர் முதலில் வேறொரு முன்னணி நடிகையால் நிராகரிக்கப்பட்டு, பிறகு அப்படத்தில் நடித்த நடிகையின் வாழ்க்கையையே மாற்றியமைத்த பல ட்விஸ்ட்கள் தமிழ் சினிமாவில் நடந்துள்ளன. அதில் சிலவற்றை பார்ப்போம்.

    Advertisement

    கோலிவுட் டாப் ஹீரோயின்களின் திரை வாழ்க்கையையும், அவர்களின் மார்க்கெட் மதிப்பையும் தலைகீழாக மாற்றிய சில நிராகரிப்புகள் குறித்த உண்மைகள், திரை வட்டாரத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

    Advertisement

    "லேடி சூப்பர்ஸ்டார்" நயன்தாரா

    தமிழ் சினிமாவின் "லேடி சூப்பர்ஸ்டார்" என்று கொண்டாடப்படும் நயன்தாரா, தனது திரைப்பயணத்தில் பல பிளாக்பஸ்டர் படங்களை நிராகரித்துள்ளார் என்பது பலரும் அறியாத உண்மை. முக்கியமாக கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்த "பையா" படத்தில்நடிக்கும் வாய்ப்பு முதலில் நயன்தாராவிற்குத்தான் போனதாம்.

    ஆனால்,சம்பளப் பிரச்சினை காரணமாக அவர் அந்தப் படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகே தமன்னா அந்தப் கேரக்டரில் நடித்தார்.. இது தமன்னாவின் சினிமா கேரியரில் ஒரு மைல்கல் படமாக அமைந்தது. அதேபோல், விக்ரம் நடிப்பில் உருவான 'கந்தசாமி' படத்தின் சான்ஸையும் நயன்தாரா தவிர்த்திருக்கிறார்.. கால்ஷீட் மற்றும் சம்பளம் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் அந்த வாய்ப்பு கைநழுவியது என்கிறார்கள்.

    Advertisement

    கொலவெறி - சமந்தா

    மறுபுறம், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் நாயகியாக வலம் வந்த சமந்தா நிராகரித்த படங்களின் லிஸ்ட்டும் மிக நீளமானது. தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகி, ஒட்டுமொத்த இந்தியாவையும் "கொலவெறி" பாடல் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த "3" படத்தில் முதலில் சமந்தாதான் நடிக்கவிருந்தார். ஷூட்டிங் தொடங்கும் நேரத்தில் ஏற்பட்ட சில தனிப்பட்ட காரணங்களால் அவர் விலக, அந்த வாய்ப்பு ஸ்ருதிஹாசனுக்கு சென்றிருக்கிறது.

    அதேபோல், மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான "கடல்" படத்திலும் முதலில் சமந்தா ஒப்பந்தமாகி, பிறகு சில காரணங்களால் படத்திலிருந்து விலகியிருக்கிறார்.. இறுதியில் துளசி நாயர் அந்தப் பாத்திரத்தில் அறிமுகமானார்.

    Advertisement

    96 படத்தில் ஜானு கேரக்டரில் இவரா?

    இதேபோல், '96" படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்த 'ஜானு' கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை அசின் தானாம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அசினை தமிழ் சினிமாவில் மீண்டும் கொண்டு வர இயக்குநர் பிரேம்குமார் நிறையவே முயற்சி செய்துள்ளார்.. ஆனால் அது சாத்தியமாகவில்லை.

    அதன் பிறகே த்ரிஷா அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.. இந்த ஜானு கேரக்டர், திரை வாழ்க்கையிலேயே மிகச்சிறந்த கம்-பேக்காக மாற்றிக் காட்டினார் திரிஷா.. அதேபோல ஷங்கர் டைரக்‌ஷனில் விக்ரம் நடித்த "ஐ" படத்தில் எமி ஜாக்சன் நடித்த கேரக்டரக்கு முதலில் தீபிகா படுகோனே மற்றும் சமந்தா ஆகியோரிடமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    டாப் ஹீரோயின்கள் மிஸ் செய்த சூப்பர் ஹிட் படங்கள்

    வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷும் தன்னுடைய பங்கிற்கு சில முக்கியப் படங்களைத் தவறவிட்டுள்ளார். மணிரத்னத்தின் "செக்கச்சிவந்த வானம்" மற்றும் அஜித்தின் "விசுவாசம்" ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் சில கால்ஷீட் பிரச்சினைகளால் அவரிடமிருந்து கைநழுவிப் போயின

    . இயக்குநர்கள் ஒரு குறிப்பிட்ட நடிகையின் இமேஜை மனதில் வைத்து கதையை எழுதினாலும், இறுதி நேரத்தில் அந்தப் படம் யாருக்குச் சென்று சேர வேண்டும் என்பதை காலம்தான் தீர்மானிக்கிறது. கோலிவுட் வரலாற்றில் டாப் நடிகைகள் செய்த சின்னச் சின்ன நிராகரிப்புகள்தான், இன்று பல புதிய நாயகிகள் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை அடைவதற்குக் காரணியாக அமைந்திருக்கின்றன...!!!

    English Summary

    Was This Actress the First Choice for Jaanu Role in 96? Nayanthara Samantha Missed These Superhit Opportunities