விஜய்யிடம் நேரடி கேள்வி? சர்ச் நிலத்தை தொட முடியுமா.. சபாநாயகர் குறித்தும் ஹெச் ராஜா காட்டமான கேள்வி

  • காஞ்சிபுரம்: விஜய்யிடம் நேரடியாக கேள்வி? சர்ச் நிலத்தை விஜயால் தொட முடியுமா, சபாநாயகர் ஜே சி பி பிரபாகரன் அவையில் பேசுவது கிறிஸ்தவ சபையில் பேசுவது போல் உள்ளது, மதச்சார்பற்ற அரசு என்று கூறிவிட்டு தேவாரம், திருவாசகம் அதையெல்லாம் பேசாமல், பைபிள் இருப்பதை மட்டும் பேசுபவராக சபாநாயகராக உள்ளார். இந்த அரசாங்கமே மதசார்பற்ற அரசாங்கம் இல்லை தேவாலயம் மற்றும் பூசாரி கொண்ட அரசாங்கம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா கூறினார்.

    Advertisement

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்த பின் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, தமிழகத்தில் போடப்பட்டுள்ள பட்ஜெட் யூஸ்லெஸ் பட்ஜெட், காரணம் எந்தவிதமான புதிய திட்டங்களும் இல்லை, பழைய திட்டங்களுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது, ஆகவே இது சினிமா சினிமாடிக் பட்ஜெட் வேண்டுமென்றால் சொல்லலாம்.

    Advertisement

    விஜயின் உண்மையான பெயர் ஜோசப் விஜய் என்று கூறியதற்கு, விஜயை பின்தொடர்பவர்கள் என்னை வசைப்பாடிய கும்பல் இவர்கள், தமிழகத்தில் அறிவற்ற பட்ஜெட்டை கொடுத்ததற்கு இதைத் தமிழகம் அனுபவிக்கும்.

    விஜய் அரசாங்கத்தில் யாராவது ஒரு புது முகத்தை நீங்கள் பார்த்திருக்கிறார்களா? அனைத்து கட்சி எம்பிகள் கூட்டத்தில் விஜய் பேச போகிறார், அனைவரும் கையை தட்டப் போகிறார்கள் இதை தவிர இந்த எம்பி கூட்டத்திற்கு பெரிதாக எடுத்துக்க தேவையில்லை. பழனியில் 100 கோடி சொத்து பதிவு செய்திருப்பது என்பது 100 கோடி மட்டும் என்பது கண் துடைப்பு, பதிவில் உள்ள 7 லட்சத்தி 76 ஆயிரத்து 550 ஏக்கர் அனைத்து நிலத்திற்கும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

    Advertisement

    விஜய்யிடம் நேரடியாக கேள்வி? சர்ச் நிலத்தை விஜயால் தொட முடியுமா, சபாநாயகர் ஜே சி பி பிரபாகரன் அவையில் பேசுவது கிறிஸ்தவ சபையில் பேசுவது போல் உள்ளது, மதச்சார்பற்ற அரசு என்று கூறிவிட்டு தேவாரம், திருவாசகம் அதையெல்லாம் பேசாமல், பைபிள் இருப்பதை மட்டும் பேசுபவராக சபாநாயகர் உள்ளார். இந்த அரசாங்கமே மதசார்பற்ற அரசாங்கம் இல்லை தேவாலயம் மற்றும் பூசாரி கொண்ட அரசாங்கம்

    மத்திய அரசு அனுமதியில்லாமல் கர்நாடக அரசு மேகதாது கட்ட முடியாது, அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்காது என ஏற்கனவே மத்திய அமைச்சர் தெரிவித்துவிட்டார், மேகதாது குறித்து பேசுவது வீண். பரந்தூர் விமான நிலையம் குறித்து ஏன் இந்த அரசு பேச மறுக்கிறது, நாடாளுமன்றத்தில் தெளிவாக 2025 பிறகு பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என எவ்வித காரணமும் இதுவரை தெரிவிக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்" இவ்வாறு ஹெச் ராஜா பேட்டியின்போது கூறினார்

    Advertisement

    இதனிடையே நேற்று சென்னையில் 'செய்! செய்யாதே!' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நடந்தது. அப்போது ஹெச் ராஜா பேசும் போது, "எனது உடல்நல குறைவின் போது டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் என் அருகில் இருந்து ஆதரவு அளித்தார். நாம் எந்த விஷயத்தையும் இயல்பாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை அப்போது நான் உணர்ந்தேன்.

    இறைவன் அருளால் அறுவை சிகிச்சை முடிந்து வெறும் ஆறு மாதங்களிலேயே உங்கள் அனைவரின் மத்தியிலும் மீண்டும் வந்து பேசும் அளவிற்கு உடல்நலம் பெற்று உள்ளேன். இதற்காக இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இப்படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் ராஜா அவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட மறந்துவிட்டார். இந்த படத்தில் நடிகர்களுக்கு எந்தவித மேக்கப்பும் போடப்படவில்லை. முற்றிலும் இயல்பான தோற்றத்திலும், எளிய உடைகளிலும்தான் நடித்துள்ளோம். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் கூறியபடி நடித்து கொடுத்துவிட்டு வந்தோம்.

    Advertisement

    இந்தப் படம் மருத்துவ துறையில் பணியாற்றும் செவிலியர்கள் முன்கள பணியாளர்களின் கஷ்டங்களை பேசுகிறது. இப்படம் கண்டிப்பாக பெரிய வரவேற்பைப் பெறும், அனைவருக்கும் என் நன்றிகள்," என்று ஹெச் ராஜா பேசினார்.

    English Summary

    Direct question to Vijay: Can Vijay touch the church land? Senior BJP leader H. Raja remarked in an interview that Speaker J.C.B. Prabhakaran’s speech in the Assembly sounded as if he were speaking in a Christian church.