ஒரு கிராம் தங்கத்தை விட்டுக் கொடுத்து 40 பவுன் தங்கதை கண்டுபிடித்த திண்டுக்கல் பிரபல நகைக்கடை

  • திண்டுக்கல்: பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழி திருடர்களுக்கு கண்டிப்பாக பொறுந்தும் ஏனெனில் எவ்வளவு பெரிய புத்திசாலியாக இருந்தாலும் அல்லது திருடிவிட்டு சமார்த்தியமாக தப்பிக்கூடியவர்களாக இருந்தாலும் ஏதேனும் ஒரு இடத்தில் தப்பு செய்வார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள பிரபல நகைக்கடையில் திருடன் செய்த ஒரு தவறால் சிக்கி கொண்டார். அவர் 40 பவுன் தங்க நகைகளை திருடியது தெரியவந்துள்ளது.

    Advertisement

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பார்களே.. அது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அப்படியே பொறுந்தியுள்ளது. நகைக்கடையில் பல நாட்களாக திருடியவர் எப்படி சிக்கினார். ஓனர் எப்படி கண்டுபிடித்தார் என்பதை பற்றி பார்ப்போம்.

    Advertisement

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நகைக்கடை பஜாரில் பிரபலமான நகைக் கடை ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நகைக் கடையில் அடிக்கடி நகைகள் சிறுக, சிறுக திருடுபோயிருக்கிறது. இதையடுத்து திருட்டை கண்டுபிடிக்க கடையில் உள்ள கேமராக்களையும், ஊழியர்களையும் கடையின் உரிமையாளர்கள் ரகசியமாக கண்காணித்து வந்தார்கள். அவர்களால் நம்ப முடியாத அளவிற்கு திருட்டுகள் நடந்திருக்கிறது. அதை யார் செய்தார் என்று பார்த்த போது, கடையில் 10 ஆண்டுகளாக வேலை பார்க்கும் நிலக்கோட்டை அருகே உள்ள கொம்புகாரன்பட்டியை சேர்ந்த பிரபு (வயது 34) என்பவர் மீது செய்திருப்பதாக அவர்களுக்கு தெரியவந்தது.

    Advertisement

    எனினும் சந்தேகத்தை வெளிக்காட்டாமல் தொடர்ந்து பிரபுவின் நடவடிக்கையை கண்காணித்தனர். அவர் கடையில் இருந்து ஒரு கிராம் நகையை திருடி தனது பாக்கெட்டில் வைத்துவிட்டார். அப்போது அவரை கடையின் ஊழியர்கள் கையும், களவுமாக பிடித்தார்கள். இதைத்தொடர்ந்து பிரபுவிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியிருக்கிறார்.

    இதுகுறித்து கடையின் உரிமையாளரான நாகப்பனின் மனைவி மாலினி என்பவர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியிடம் நடந்த சம்பவங்களை விரிவாக எழுதி புகார் கொடுத்தார். இதையடுத்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் பிரபுவை பிடித்து சென்று விசாரித்தார்கள்.

    Advertisement

    போலீசார் நடத்திய விசாரணையில், கடையில் நிலவும் சூழ்நிலை அறிந்து நகைகளை திருட பிரபு முடிவு செய்திருக்கிறார், அதன்படி கடையில் ஒரு கிராம், 2 கிராம் என்ற வீதம் சிறுக, சிறுக கடந்த சில ஆண்டுகளாக மொத்தம் 40 பவுன் நகைகளை பிரபு திருடியது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சத்யகுமார் வழக்குப்பதிந்து பிரபுவை கைது செய்தார். பின்னர் அவர் நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடமிருந்த 40 பவுன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

    English Summary

    How did a famous jewelry shop in Nilakottai, Dindigul district, discover 40 sovereigns of gold after giving up just one gram?