டெல்லி: வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் வட இந்திய ரயிலில் புக் செய்துவிட்டு, அந்த ரயிலில் ஏறுவதற்குள் படாத பாடு பட்டதாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கோபத்துடன் கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இங்குள்ள விருந்தோம்பல், மக்கள் காட்டும் அன்பை பார்த்து வியந்து பதிவிடும் சில பதிவுகளை சமூக வலைத்தளங்களில் காண முடியும். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நமது ஊர் உணவு மட்டுமின்றி, மக்கள் காட்டும் அக்கறையும் ரொம்பவே பிடித்து போய்விட்டதாக சிலாகிப்பார்கள்.
ஆனால் ஒரு சில பயணிகள் இப்படி ஒரு அனுபவம் தங்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை என்று ஆதங்கப்பட்டு பதிவிடுவதையும் பார்க்க முடியும். கிட்டத்தட்ட அப்படி ஒரு பதிவுதான் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது. வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவர் வட இந்திய ரயிலில் புக் செய்துவிட்டு, அந்த ரயிலில் ஏறுவதற்குள் படாத பாடு பட்டதாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மியா நிகோலே என்ற அந்த வெளிநாட்டு பெண் பயணி தனது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில், "இந்த ரயிலில் எந்த பெட்டியில் ஏற வேண்டும் என்றே எனக்கு தெரியவில்லை. ஆனால், இவற்றில் ஒன்றாக அது இருக்கக் கூடாது என்று நம்புகிறேன். ஏனென்றால், இங்கு பயங்கரமான கூட்டம் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே தனது பெட்டியை கண்டுபிடிக்க ரயிலை நோக்கி வேகமாக நடந்து கொண்டு இருந்தார். இன்னும் 3 நிமிடங்கள்தான் இருக்கின்றன. ரயில் பெட்டியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறிக்கொண்டே விறுவிறுவென நடந்து சென்றார். தனது வீடியோவில், பெட்டியிலிருந்து இறங்கிய சில பெண் பயணிகள், டிக்கெட் பரிசோதகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் காட்டிக்கொண்டே இவ்வாறு கூறினார். இந்திய ரயில்களில் உள்ள கூட்ட நெரிசல் குறித்து நையாண்டி செய்யும் வகையில் அந்த வெளிநாட்டு பெண் பயணி பதிவிட்டது நெட்டிசன்கள் இடையே கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் மியா நிக்கோலே வீடியோவின் கமெண்ட்டிலேயே காட்டமான பதிலடியை கொடுத்தனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், ஆன்லைனில் கவனம் ஈர்ப்பதற்காக திட்டமிட்டு இதுபோல இந்த வெளிநாட்டு பெண் பயணி செய்வது போல உள்ளது. உங்களுக்கு சொகுசான ரிலாக்ஸ் ஆன பயணம் வேண்டும் என்றால் வந்தே பாரத் ரயில் உள்ளது. அதில் செல்ல வெண்டியதுதானே.. 5 டாலருக்கு குறைவான கட்டணத்தில் பயணிக்க வேண்டும். முதல் வகுப்பு போலவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் கூட நியாயம் இல்லை." என்று பதிவிட்டுள்ளனர். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், வியூவ்ஸ்களுக்கான பில்டப்தான் இது.. இதை பெரிதாக்க வேண்டியது இல்லை என்று பதிவிட்டு இருந்தார். சில நெட்டிசன்கள், அந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு ஆதரவாகவும் பதிவிட்டுள்ளனர். இந்திய ரயில்களில் இதுபோல சில சிக்கல்கள் இருப்பது உண்மைதான். அதிலும் வட இந்தியா பக்கம் போனால் சொல்லவே தேவையில்லை. ரிசர்வ் செய்த சீட்டில் கூட நாம் தைரியமாக இருக்க முடியாது' என்று பதிவிட்டுள்ளார்.வெளிநாட்டு சுற்றுலா பெண் பயணி வீடியோ
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் நிலைமை எல்லை மீறி போய்விட்டது.. பயணி வெளியிட்ட அழுத்தமான பதிவு
நெட்டிசன்கள் கோபத்துடன் பதிலடி
வியூவ்ஸ்களுக்காக இப்படி செய்கிறார்
நடுவானில் இந்தியருக்கு நேர்ந்த துயரம்.. விமானத்தில் நடந்த கொடூரம்.. பரிதாபமாக பறிபோன உயிர்