கிண்டி நட்சத்திர ஹோட்டலில் தலைமறைவு! வடசென்னை பிரபல ஏ+ தாதா எண்ணூர் தனசேகர் துப்பாக்கி முனையில் கைது

  • சென்னை: வடசென்னையைச் சேர்ந்த பிரபல ஏ+ தாதா எண்ணூர் தனசேகரை (47) போலீஸார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். சென்னை கிண்டி நட்சத்திர ஹோட்டலில் தலைமறைவாக இருந்தவரிடம் இருந்து கார், துப்பாக்கி, செல்போன் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது.

    Advertisement

    சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி தனசேகர். இவர் மீது கொலை, கொள்ளை, தொழிற்சாலை உரிமையாளர்களை மிரட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.

    Advertisement

    இந்த நிலையில் இந்த வழக்குகளில் அவரிடம் விசாரணை நடத்த முற்பட்ட போது அவர் தலைமறைவாக இருந்தார். ஆவடி காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் செங்குன்றம் காவல் துணை ஆணையர் தலைமையிலான எண்ணூர் போலீஸார் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனசேகர் பதுங்கியிருப்பதாக எண்ணூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு போலீஸார் அந்த ஹோட்டலை சுற்றி வளைத்தனர்.

    இதை அறிந்த தனசேகர் தன்னால் தப்பி செல்ல முயலாத நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். எனினும் தனசேகர் தப்பி செல்ல முயன்ற போது போலீஸார் துப்பாக்கி முனையில் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட தனசேகரிடம் இருந்து துப்பாக்கி, சொகுசு கார், செல்போன் உள்ளிட்டவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    English Summary

    A North Chennai gangster Ennore Dhanasekar was arrested in Gunpoint midnight at Chennai Guindy Star hotel where he was hiding.