அன்று vs இன்று.. சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் சந்தித்த பெரிய மாற்றம்

  • சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. வழக்கமாக அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக வருவதாக புகார்கள் எழுந்து வந்தன. தற்போது பயோ மெட்ரிக் மூலம் பதிவு செய்யப்படுவது மூலம் உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள இடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எவ்வளவு பேர், எத்தனை மணிக்கு பணிக்கு வருகின்றனர். தாமதமாக எவ்வளவு பேர் வருகின்றனர் என்பதை தன்னிடம் உள்ள கம்ப்யூட்டரில் தெரிந்து கொள்ள முடியும்.

    Advertisement

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் அமைச்சர்கள், அலுவலகங்கள் உள்ளன.

    Advertisement

    சென்னை தலைமைச்செயலகம் மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகை 10 தள கட்டிடத்தில், 54 துறை செயலர்கள், பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். இந்த அலுவலகங்களில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    காலை 10 மணிக்கு அலுவலகம் வந்து மாலை 5.45 மணிவரை பணிநேரம். உணவு இடைவேளை அரை மணி நேரமாக உள்ளது.
    இந்நிலையில், மனிதவள மேலாண்மைத்துறையில் , வருகைப்பதிவுக்காக பயோமெட்ரிக் மற்றும் முகம் கண்டு அறியும் தொடுதிரை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

    மனிதவள மேலாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று தேதி முதல் பயோமெட்ரிக் (Biometric) அல்லது முக அங்கீகார அடிப்படையிலான வருகைப்பதிவைக் கட்டாயமாக்கியுள்ளது. அந்த துறையின் அலுவலர்கள் வருகை இதன் மூலம் பதிவு செய்யப்படுகிறது.

    Advertisement

    இதைத்தொடர்ந்து மற்ற துறைகளுக்கும் விரைவில் இதே முறை வருகைப்பதிவேடு திட்டத்தை விரிவுபடுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டு தலைமைச் செயலக பணியாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் தற்போது மனிதவள மேலாண்மை துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவேடு நடைமுறைக்கு வந்துள்ளது.

    முன்னதாக தமிழக மனித வளத்துறை சார்பில் அனைத்து அரசு உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் மனித வளத்துறை செயலாளர் உத்தரவுப்படி பயோ மெட்ரிக் மற்றும் பேஸ் ஐடி மூலம் வருகை பதிவேட்டு முறை வருகிற ஜூன் 1ம் தேதி முதல் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

    Advertisement

    காலை 10 மணிக்கு முன்னர் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் வருகையை பயோ மெட்ரிக்கில் பேஸ் ஐடி மூலமும், பதிவேடு மூலமும் கணக்கிட வேண்டும். மறு உத்தரவு வரும்வரை இந்த முறையை பின்பற்ற வேண்டும் இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. அதன்படியே நடைமுறைக்கு வந்துள்ளது.

    English Summary

    Effective today, a biometric attendance system has been implemented for officials and staff of the Department of Human Resources Management at the Chennai Secretariat. Let us examine the background behind the reintroduction of this system—a practice that had previously been revoked during the DMK regime following opposition—under the current TVK administration.