தாம்பரம் ரயில் நிலையத்திற்கு பிறந்த விடிவு.. எல்லாமே மாறுகிறது.. தென்மாவட்ட மக்கள் அறிய வேண்டியவை

  • சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து கூடுதல் தொலைதூர ரயில்களை இயக்குவதற்காக, அங்குள்ள தண்டவாளங்களின் எண்ணிக்கையை 10-லிருந்து 15 ஆக உயர்த்தவும் தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தார் எழும்பூர் ரயில் நிலையத்தின் நெரிசல் பெருமளவு குறையும் என்பதால், இந்த திட்டத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. தாம்பரத்தில் 15 தண்டவாளங்கள் அமைக்கப்பட்டால், சென்னை நகரத்தின் இரண்டாவது மிகப்பெரிய ரயில் இயக்க மையமாகத் தாம்பரம் உருவெடுக்கும் என தெரிகிறது.

    Advertisement

    சென்னையின் மூன்றாவது ரயில் முனையமாக உள்ள தாம்பரத்தில் இருந்து தினமும் 500க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் செங்கல்பட்டு, அரக்கோணம்,கடற்கரை பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இதுதவிர தாம்பரம் வழியாக நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, செங்கோட்டை, ஹைதராபாத், ஹவுரா, கவுகாத்தி உள்பட 50-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர்ஃபாஸ்ட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் ரயில் நிலையத்தை தினமும் சராசரியாக 2 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தும் நிலையில், சராசரியாக ஆண்டுக்கு 3.5 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள்.

    Advertisement

    தாம்பரம் ரயில் நிலையம் மூன்றாவது முனையாக மாற்றப்பட்ட பின்னர், அதற்கு ஏற்ப தண்டவாளங்கள், பிளாட்பார்மகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தற்போது 10 தண்டவாளங்கள் தாம்பரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக தண்டவாள மேம்பாடு மற்றும் நடைமேடை விரிவாக்கப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன; இவை வரும் மார்ச் மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சூழலில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து கூடுதல் தொலைதூர ரயில்களை இயக்குவதற்கு வசதியாக, தண்டவாளங்களின் எண்ணிக்கையை 10-லிருந்து 15 ஆக உயர்த்த தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் பரிந்துரை செய்திருக்கிறது. வருங்காலத்தில் தாம்பரம் செங்கல்பட்டு இடையே நான்காவது ரயில் பாதை அமைக்கப்பட உள்ளதால், அப்போது மின்சார ரயில்கள் பல தாம்பரம் வரை இயக்கப்படும். அதற்கு ஏற்ப தாம்பரம் ரயில் நிலையத்தின் தண்டவாளங்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    Advertisement

    எனவே 10 தண்டவாளங்களை 15 தண்டவாளங்களாக மாற்றும் சென்னை ரயில்வே கோட்டத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன், சென்னை மாநநகரின் மூன்றாவது ரயில் முனையமாக அறிவிக்கப்பட்ட தாம்பரம் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தைப் பின்னுக்குத் தள்ளி, மாநிலத்தின் தென் பகுதிகள் மற்றும் வட மாநிலங்களுக்கான ரயில்களை இயக்கும் முதன்மைப் போக்குவரத்து மையமாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்போதைய சூழலில் இதற்கு மேல் அறிவிக்கப்படும் ரயில்கள் எதுவாக இருந்தாலும் தாம்பரத்தில் இருந்தே புறப்படும் என்கிற நிலை தான் உள்ளது. எழும்பூரில் இட வசதி ஒருபுறம் எனில், ரயில்கள் நின்று செல்வதற்கு நேரமும் கிடையாது.

    Advertisement

    எனவே தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையத்தில் தண்டவாள மேம்பாட்டுப் பணிகள் மற்றும் பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் தற்போது விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னை கோட்டம் தண்டவாளப் பாதைகளை 10-லிருந்து 15 ஆக உயர்த்த முன்மொழிந்துள்ளது; இத்திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்ததும், எழும்பூர் ரயில் நிலையத்தின் செயல்பாட்டு நெரிசலைக் குறைக்க இது பெரிதும் உதவும்.

    "தற்போது எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. தாம்பரம் ரயில் நிலையத்தின் வடக்குச் பகுதியில் இரண்டாவது நடைமேம்பாலம் கட்டும் பணியும் வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிகிறது. அதனுடன் நிலையத்தின் இருபுறமும் வாகனங்கள் வந்து செல்லும் வசதிகளும் உருவாக்க உள்ளோம். கிழக்குச் பகுதியில், பயணிகள் நடைமேம்பாலத்தை அடைவதற்கான புதிய சாலைப் பணிகள் தொடங்கப்பட்டு, அது பாரதமாதா சாலையுடன் இணைக்கப்படும் என்றார.

    Advertisement

    தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வசதிகள்

    தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாள விரிவாக்கப் பணிகளுடன் இணைந்து, ரயில்வே காத்திருப்போர் கூடங்கள் கட்டுதல், எஸ்கலேட்டர்கள் மற்றும் லிஃப்ட்களைப் பொருத்துதல், புதிய நடைமேம்பாலத்தை அனைத்து நடைமேடைகளுடனும் இணைத்தல் போன்ற பல்வேறு பயணிகள் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இந்த உள்கட்டமைப்புப் பணிகள் அனைத்தும் ₹19 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு லட்சக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்லும் நிலையில் ரயில்கள் இயக்கப்படும் அல்லது நிறுத்தப்படும் நடைமேடைகளைச் சென்றடைவதில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள். பழைய நடைமேம்பாலத்தைப் பயன்படுத்தக் கனமான லக்கேஜ்களைச் சுமந்து செல்ல முடியாமல் பலர் அவதிப்பட்டு வருகிறார்கள் பேட்டரி கார்களை நம்பித்தான் முதியவர்கள் இருக்கிறார்கள்.

    Advertisement

    தற்போது புதிய நடைமேம்பாலத்துடன் இணைந்து டிக்கெட் பெறுவதற்கான உயர்மட்ட முன்பதிவு மையம் மற்றும் காத்திருப்போர் கூடம் அமைக்க முன்மொழியப்பட்டிருக்கிறது. தாம்பரம் ரயில் நிலையத்தின் அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் 9 லிஃப்ட்கள் மற்றும் 10 எஸ்கலேட்டர்களை நிறுவப்பட இருக்கிறது.இது ஒருபுறம் எனில், ரயில் நில மேம்பாட்டு ஆணையம் , தாம்பரம் ரயில் நிலையத்தில் இந்த பிரம்மாண்ட ரயில் முனைய மறுசீரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்தும் வருகிறது.

    English Summary

    Southern Railway plans to increase the number of tracks at Tambaram railway station from 10 to 15 to facilitate the operation of additional long-distance trains. Interest in this project has grown because its implementation would significantly reduce congestion at Egmore railway station.