“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!


  • சென்னை: ஒரு இயக்கம் இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கூறியிருப்பது அரசியல் களத்தில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    திமுக கூட்டணியில் இருந்து போட்டியிட்டிருந்த காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, ஐயுஎம்எல் மற்றும் விசிக தற்போது தவெக கூட்டணியில் இருக்கின்றன. ஒருவேளை மதிமுக தனது சொந்த சின்னத்தில் போட்டியிட்டிருந்தால், அக்கட்சியும் தவெக பக்கம் தாவியிருக்க இருக்கும். அப்படியான சூழல் இல்லாத நிலையில், தற்போது துரை வைகோவின் பேச்சு கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமானது என்ற தனது முந்தைய கருத்தை வலியுறுத்தினார். சொந்தச் சின்னமின்றி மற்றொரு சின்னத்தில் போட்டியிடுகையில் தனித்துவத்தையும் அடையாளத்தையும் முழுமையாக இழக்கிறது என கூறியிருக்கிறார்.

    பலரும் அறியாத ஒரு முக்கிய விதியையும் துரை வைகோ விளக்கினார். ஒரு வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டால், முதலில் சொந்தக் கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்பின், எந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறாரோ, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்துதான் போட்டியிட முடியும் என்றார்.

    Advertisement

    திமுக சின்னத்தில் போட்டியிட்டதற்கான காரணத்தை விவரித்த துரை வைகோ, "கடைசி நேரத்தில் ஏற்பட்ட நிர்ப்பந்தமே இதற்குக் காரணம். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் மனவேதனை எங்களின் துரதிர்ஷ்டவசமான செயல் என்பதை ஆயிரம் முறை சொல்வேன்" என்றார். தலைமை ஏற்க மறுத்தாலும், ஓர் இயக்கம் மற்றொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

    துரை வைகோவின் இந்த பேச்சு திமுக தலைமைக்கு டென்ஷனை கொடுத்திருக்கிறது. சொந்த சின்னத்தில் போட்டியிட விருப்பம் இல்லை எனில் அதில் உறுதியாக நின்றிருந்தால், யாராலும் அந்த நிலைப்பாட்டை மாற்றியிருக்க முடியாது. ஆனால், அப்போது ஒப்புக்கொண்டு இப்போது வந்து துரதிர்ஷ்டம் என்று சொன்னால் எப்படி? என திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    English Summary

    Durai Vaiko: MDMK Principal Secretary Durai Vaiko's statement—that one political movement should not contest under the symbol of another—has sparked debates within the political arena.