கசப்பான அனுபவம்.. பெங்களூரு எம்பி தேஜஸ்வி சூர்யாவின் மனைவி ரயில் பயணம் குறித்து வெளியிட்ட பதிவு

  • பெங்களூர்: பெங்களூரு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவின் மனைவியும் பாடகியுமான சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் தனக்கு ரயில் பயணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற சிவிக் சென்ஸில் நாம் தோற்றுவோட்டோம் என்றும், இடைவிடமால் தொந்தரவு அளிக்கும் வகையில் ரயில் பயணங்களில் சிலர் பேசிக்கொண்டே இருந்ததாகவும் வருத்தப்பட்டுள்ளார்.

    Advertisement

    பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவரும், பெங்களூரு எம்பி தேஜஸ்வி சூர்யாவின் மனைவி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், கர்நாடக இசைப் பாடகரான இவர், பரதநாட்டியக் கலைஞர் ஆவார். இவர் ரயில் பயணத்தின்போது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுபற்றி சிவஸ்ரீ கூறுகையில், " இன்று எனக்கு ஒரு பயங்கரமான ரயில் பயணம் அமைந்தது. மக்கள் பொது இடங்களை மதிப்பதே இல்லை என்பதைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. பொது இடங்களில் இருக்கும்போது நாம் கத்தக்கூடாது, உரக்கப் பேசக்கூடக் கூடாது; ஒவ்வொரு தனிநபரின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும். கலைஞர்களாகிய எங்களுக்குள் 100 சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கும்.

    Advertisement

    அமைதியில்தான் நாங்கள் வளருவோம். ஒரு பெரிய கூட்டமாக ரயிலில் பயணம் செய்யும்போது ஏற்படும் ஆரம்பகட்ட உற்சாகத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், 56 இருக்கைகள் கொண்ட ஒரு பெட்டியில் 40 நடுத்தர வயதுடைய நபர்கள் அமர்ந்துகொண்டு, 5 மணி நேரமாகத் இடைவிடாமல் அனைவருக்கும் கேட்கும் வகையில் உரக்கப் பேசிக்கொண்டிருப்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்தியாவில் உள்ள பிரச்சனை என்னவென்றால், அவர்களை யாராலும் கேள்வி கேட்க முடியாது. அந்த அமைப்பில் இல்லாத மீதமுள்ள 16 பேரும் அவர்களைப் பொறுத்துக்கொண்டுதான் போக வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதியாகவே உள்ளது.

    Advertisement

    எனவே நான் டிக்கெட் பரிசோதகரிடம் வேறு பெட்டியில் எனக்கு வேறு இருக்கை கிடைக்கிறதா என்று கேட்டேன். அவரும் முயற்சி செய்தார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரயில் முழுமையாக நிரம்பியிருந்ததால், நான் அதே பெட்டியிலேயே வேறு ஒரு இருக்கையில் அமர வேண்டியதாயிற்று. திடீரென்று, ஏற்கனவே இடைவிடாமல் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்த 8 பேர் கொண்ட ஒரு கும்பல் 'UNO' விளையாடத் தொடங்கியது. மீண்டும் நான் டிக்கெட் பரிசோதகரிடம் இதற்கு ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டுக்கொண்டேன்.

    அவர் அவர்களிடம் நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார், அவர்களும் உடனே நிறுத்தினர். ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு TTE மீண்டும் அவர்களிடம் வந்து, கிண்டலாக 'யாக்கே சர் கலாட்டே மாடுதைதீரா?' (ஏன் சார் கூச்சல் போடுறீங்க?) என்று கேட்க, அவர்களும் அவருடன் சேர்ந்து சிரித்துக்கொண்டே, 'சர் நீவு பன்னி, அடோனா' (சார் நீங்களும் வாங்களேன், விளையாடலாம்) என்று கூறினார்கள்.

    Advertisement

    இங்கே விஷயம் யார் ஜெயித்தார்கள் என்பது அல்ல. அவர்களுடன் சேர்ந்து நானும், இந்தியர்களாகிய நாம் அனைவரும் 'பொதுநல பண்பாடு' எனும் விளையாட்டில் தோற்றுவிட்டோம். ஒரு நாடாக நமது பொது நடத்தை எப்போதுதான் முன்னேறும்?" இவ்வாறு காட்டமாக கேள்வி எழுபபி உள்ளார்.

    English Summary

    Sivashree Skandaprasad, a singer and the wife of Bengaluru BJP MP Tejasvi Surya, has shared a post on social media regarding a bitter experience she had while traveling by train. In the post, she stated that we have failed when it comes to the civic sense of how to conduct ourselves in public spaces.