A.Raja: நிர்மல் குமார் குறித்த அநாகரீக பேச்சு! வருத்தம் தெரிவித்தார் திமுக எம்பி ஆ.ராசா

  • சென்னை: அமைச்சர் நிர்மல் குமார் குறித்து அநாகரிகமாக பேசியதற்கு தனது வருத்தத்தை திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், "மிசா குறித்து சந்தேகமா, எனக்கு கூட நீ யாருக்கு பிறந்தேனு சந்தேகம், நான் கேட்கவா" என பேசியிருந்தார்

    Advertisement

    ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோரே கண்டித்திருந்தனர். இந்த நிலையில் தனது பேச்சுக்கு ஆ.ராசா வருத்தம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது: தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் 'அடையாளத்தை' - உண்மை'யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் 'பொய்' என்று கொச்சைப்படுத்தி 'ஏளனம்' செய்ததால் ஏற்பட்ட 'வலியை' உணர்த்த ஏளனம் செய்தவரின் 'அடையாளத்தை' 'உண்மையை' உணர்ச்சி உந்துதலில்
    கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்;

    என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள். இவ்வாறு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

    சென்னை சைதாப்பேட்டையில் நடந்த திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் தமிழ்நாடு சட்டசபைக்கு என ஒரு வரலாறு இருக்கிறது. முதல்வராக கருணாநிதி இருந்த போதும், எம்ஜிஆர் இருந்த போதும் ஆக்கப்பூர்வமான முதிர்ச்சியான கேள்விகளுக்கு முறையாக பதில் அளிப்பார்கள்.

    Advertisement

    சிற்றரசு பேசும் போது மகா நடிகர் என்று சொன்னார், ஆனால் அவர் மகா நடிகர் இல்லை, தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா என பாடியவர் மகா நடிகனா? சினிமாவின் மூலம் ஒரு நடிகனாக மக்களுக்கு நீ என்ன செய்திருக்கிறாய்? மக்களுக்கு நீ என்ன சொல்கிறாய் என்பதுதான் விஷயம். நீங்கள் மகா நடிகர் அல்ல, மகா அயோக்கியன்.

    கொலஸ்ட்ரால் ரத்தத்தில் இருக்கலாம், மூளையில் இருக்கக் கூடாது, இப்போது ஒருவர் இதற்காக சிறைக்கு போகவில்லை, அதற்காக போகவில்லை என்கிறார். எனக்குக் கூட நீ யாருக்காகப் பிறந்தாய் என்பதில் சந்தேகம் இருக்கிறது. நான் கேட்கலாமா, நீ என் தலைவனின் தியாகத்தை சந்தேகிக்கும் போது நான் உன் பிறப்பைச் சந்தேகிக்கிறேன். முடிந்தால் வழக்கு போட்டுக் கொள். இவ்வாறு ராசா பேசியிருந்தார்.

    Advertisement

    ஆ.ராசாவின் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்தன. திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ்வலைதள பக்கத்தில், "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு." என கண்டித்திருக்கிறார்.

    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது பதிவில் கூறியிருப்பதாவது: திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.

    திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் அதைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை. அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டியுங்கள். அவருடைய தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    Advertisement

    பொதுவெளியில் பெண்களை இழிவு படுத்தி பேசுபவர் யாராக இருந்தாலும் அந்தந்த கட்சி தலைமை கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முன்வர வேண்டும்.

    சில திமுகவினர் "கண்ணியம்" தவறுவது தொடர்கிறது. "கட்டுப்பாடு" நிலை நிறுத்தும் "கடமை"யை திமுக. தலைவர் செய்வார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். பெண்களை அவமதிக்கும் விதமாக பேசிய ஆ.ராசாவுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்ததால் அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    DMK MP A.Raja asks apology for derrogatory statement against Minister Nirmal kumar in DMK protest against Vijay.