முதல்வர் விஜய் குறித்து அவதூறு.. ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை.. அடுத்தது என்ன?

  • சென்னை: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 12ஆம் தேதி சைதாப்பேட்டையில் திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் பற்றி ஆ.ராசா அவதூறு பேசியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    சட்டசபையில் முதல்வர் விஜய் திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாக சர்ச்சையாக பேசி இருந்தார். விஜய்யின் பேச்சை கண்டித்து திமுகவினர் செப்டம்பர் 12ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பி ஆ.ராசா பேசுகையில், எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. நீ யாருக்கு பிறந்த என்று ஆவேசமாக பேசினார்.

    Advertisement

    ஆ.ராசாவின் பேச்சிற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இதன்பின் ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில், தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின்
    'அடையாளத்தை' உண்மை'யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் 'பொய்' என்று கொச்சைப்படுத்தி 'ஏளனம்' செய்ததால் ஏற்பட்ட 'வலியை' உணர்த்த ஏளனம் செய்தவரின் 'அடையாளத்தை' 'உண்மையை' உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்;

    என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என்று பதிவிட்டார். இந்த நிலையில் திமுக எம்பி ஆ.ராசா அவதூறாக பேசியதாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆ.ராசாவின் பேச்சு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

    Advertisement

    சுமார் 80க்கும் அதிகமான புகார்கள் வந்த நிலையில், இன்று ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, ஆபாசமாக பேசுவது உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் சூழலில் காவல்துறையினரால் கைது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    English Summary

    R Raja: DMK MP A Raja Booked Under 7 Sections for Alleged Defamatory Remarks Against CM Vijay