ஆதவ் அர்ஜுனா பேச்சே தினுசா இருக்கு.. எங்களை பற்றி திருமாவிடம் கேளுங்க.. ஒரே போடாக போட்ட ஆ.ராசா

  • சென்னை: தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல் ஆகியவற்றில் தவெக வெற்றி பெற்றுள்ளது. மறுபக்கம் எஸ்ஐஆர் விவகாரத்தில் தவெக, திமுக இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் விசிகவின் நிலைப்பாடும் சர்ச்சையாகியுள்ளது. திமுக மீது ஆதவ் அர்ஜுனா கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதற்கு திருமாவளவன் சொன்னதை மேற்கோள்காட்டி ஆ.ராசா தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

    Advertisement

    சென்னையில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எஸ்ஐஆரில் தவறு நடந்துள்ளதை பத்திரிகை ஊடகத்தில் வெளியிட்டுள்ளனர். அதை நாங்கள் கோடிட்டு காட்டியுள்ளோம். தமிழகத்திலும் எஸ்ஐஆரில் தவறு நடந்துள்ளது. ஆதவ் அர்ஜுனா என்ன கணக்கில் பேசுகிறார் என்றே தெரியவில்லை. அவர் பேசுவது எல்லாமே தனிக்கணக்காக உள்ளது. ஆதவ் அர்ஜுனா சொல்வதையெல்லாம் எங்களிடம் கேட்பதில் பலனில்லை.

    Advertisement

    திருமாவளவனிடம் பேசச் சொல்லுங்க

    தேர்ந்த அரசியல்வாதி, நாடாளுமன்றத்தில் மிக நீண்ட காலமாக இருந்த திருமாவளவனிடம் பேசச் சொல்லுங்கள். நாங்கள் ஆதவ் அர்ஜுனாவிடம் மிகவும் தூரமாக உள்ளோம். அவர் அருகிலேயே திருமா உள்ளார். திமுக ஆட்சிக்கு வராமல் போனதற்கு காரணம் எஸ்ஐஆர் தான். கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வியடைந்ததற்கு காரணம் எஸ்ஐஆர் என்று திருமாவளவன் சொல்லியுள்ளார்கள். அவர்கள் திருமாவுடன் இணக்கமாக உள்ளனர். அவர்களை செட்டில் செய்ய சொல்லிட்டு எங்களிடம் வரச்சொல்லுங்க.

    மாறும் நிலைப்பாடு

    திமுகவிடம் என்னவிதமான கேள்வியை கேட்க வேண்டுமென கேட்டு விட்டு வருவது நல்லது. எஸ்ஐஆரில் தேர்தல் ஆணையத்தின் பணி தவறு என்று சிஜேபி சொல்கிறது. எஸ்ஐஆரில் காங்கிரஸ் சொல்வது என்ன. மாநிலத்திற்கு மாநிலம் அவர்களின் நிலைப்பாடு மாறுகிறது. இரட்டை நிலைப்பாட்டில் உள்ளனர். கேரளா, தமிழகம் எல்லாம் சரியாக நடந்துள்ளது என்கிறார்கள். தவறை சரியாக சுட்டி காட்ட வேண்டும். அங்கு ஒரு நிலைப்பாடு, இங்கு ஒரு நிலைப்பாடு தவறு.

    Advertisement

    சிஜேபி அரசியலுக்கே வரலையே

    சிஜேபி இன்னும் அரசியலுக்கே வரவில்லை. அவர்கள் இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்கிறார்கள். ஜனநாயகத்தை முன் நிறுத்த வேண்டியது தேர்தல் கமிஷன். அதை அவர்கள் செய்யவில்லை என்கிறார்கள். அதற்கு நாங்கள் துணை நிற்கிறோம். அதைத்தாண்டி நாங்கள் எதுவும் பேசவில்லை. சிஜேபி ஏதோ 150 சீட்டுகளில் நிற்பதே போலவும், நாங்கள் 20 தொகுதிகளில் நிற்பது போல கேட்கிறார்கள். சிஜேபி சில மாநிலங்களை கைப்பற்றுவார்கள் என்று சொல்லியுள்ளார். அவரே சொல்லும்போது நாங்கள் என்ன சொல்ல வேண்டும்" என்றார்.

    English Summary

    DMK leader A. Raja takes a sharp swipe at Aadhav Arjuna over his remarks on the SIR controversy, asking him to discuss the issue with VCK chief Thirumavalavan instead.