ஆ.ராசா அவர் வேலையை பார்த்தால் போதும்.. அவதூறு பேசினால் விசிக பதிலடி கொடுக்கும்.. வன்னி அரசு!

  • சென்னை: ஆ.ராசா போன்றோர் அவரவர் வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்றும், எங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டிய தேவையில்லை என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். அதேபோல் திமுக அவதூறு பரப்பினால் விசிக சார்பாக தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும் பேசியுள்ளார்.

    Advertisement

    தவெக ஆட்சி அமைக்க விசிக ஆதரவு அளித்ததோடு, அமைச்சரவையிலும் இடம்பிடித்தது. விசிகவில் இருந்து வன்னி அரசு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றதன் மூலமாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக புரிந்து கொள்ளப்பட்டது. இதனால் விசிகவை திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

    Advertisement

    இதனிடையே திமுக எம்பி ஆ.ராசாவின் கருத்துக்கள் விசிகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், திமுக அவதூறு பரப்பினால் தகுந்த பதிலடியை நாங்கள் கொடுப்போம் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆ.ராசா போன்றவர்கள் அவரவர் வேலையை பார்த்தால் மட்டும் போதும். எங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டிய தேவையில்லை.

    2021ல் விசிக 4 தொகுதிகளில் வென்றது. 2026ல் 2 தொகுதிகளில் வென்ற நிலையில், தவெக ஆட்சி அமைக்க விஜய் நேரடியாக திருமாவளவனை தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். அதன் காரணமாகவே அமைச்சரவையில் இடம்பெற்றோம். அமைச்சரவையில் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை விஜய்யே நேரடியாக வைத்தார். தேர்தலுக்கு முன்பே ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்திருந்தார்.

    Advertisement

    அதற்கேற்ப அந்த கோட்பாட்டை நிலை நிறுத்தியுள்ளார். திமுக தோழர்கள் தொடர்ந்து விசிக துரோகம் இழைத்துவிட்டதாக பேசி வருகிறார்கள். அதற்கு பதிலாகவே யார் துரோகம் இழைத்தார்கள் என்று திருமாவளவன் பதில் அளித்தார். துரோகம் செய்தது திமுகவா? விசிகவா என்பது நாட்டில் அனைவருக்கும் தெரியும். 4 எம்எல்ஏ-க்கள் இருக்கும் போது, திமுக ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை.

    அதற்கான வாய்ப்பு இப்போது வந்த போது, இப்படி விமர்சனத்தை வைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும். ஸ்டாலின் மீது விசிகவுக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது. திமுக அவதூறு பரப்புவதை ஆற்றாமையின் வெளிப்பாடாகவே பார்க்கிறோம். தமிழ்நாட்டிற்கு வழியை காட்டிக் கொண்டிருப்பவர்கள் தான் விசிகவினர்.

    Advertisement

    சாதி ஒழிப்பு களத்தில் விசிக வீரியமாக இருக்கும். கால் நூற்றாண்டுக்கு மேலாக இந்த களத்தில் இருக்கிறோம். எங்களை திமுக விமர்சிப்பதன் மூலமாக பாஜகவுக்கு எதிரான அரசியலை திசை திருப்பும் வேலையை திமுக செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார். வன்னி அரசின் பேச்சு அக்கட்சியினர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    English Summary

    A Raja: Minister Vanni Arasu Warns DMK MP A Raja and Reply to If DMK Spreads Defamatory Content