சென்னை: தமிழகத்தில் இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க நாளை மறுநாள் சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 18 வயது முடிந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை இணைக்கலாம் என்றும், அனைத்து மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், "வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதிதாக பதிவு செய்ய உள்ள இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது" என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இளம் வாக்காளரை பட்டியலில் சேர்க்க வரும் 10 ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியிருப்பதாவது:- எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவடைந்துள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களாக தகுதி பெற்றவர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, வரும் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சிறப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களாக தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்காக, தேவைக்கேற்ப மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் வரும் சனிக்கிழமை நடத்தப்படும். முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியல் சேர்ப்பதை அதிகரிக்கும் வகையில், நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் பெருநகரங்களுக்குச் சிறப்புக் கவனம் அளிக்கப்படும். தகுதியுடைய இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு வசதியாகவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள தேர்தல் கல்வியறிவுச் குழுக்களின் சேவைகள் திறம்பட பயன்படுத்தப்படும். சிறப்பு இயக்கம் குறித்து ஊடகங்கள் மூலமாகவும், மாவட்டத் தேர்தல் அலுவலர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகள் மூலமாகவும் பரவலான விளம்பரம் செய்யப்படும். சிறப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து கண்காணிப்பதற்கும், அறிவுறுத்தல்களைத் திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும், வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் தொடர்ந்து கூட்டங்களை நடத்துவார்கள்" என்று கூறியுள்ளார். தேர்தல் அதிகாரியின் அறிவிப்பை அடுத்து சென்னை மாநகராட்சி சிறப்பு முகாம் தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதிதாக பதிவு செய்ய உள்ள இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். எனவே, வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யவுள்ள இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் உரிய ஆவணங்களுடன் சிறப்பு மிகாமில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முதல் முறை வாக்காளர்கள்சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் 4,079 வாக்குச்சாவடி மையங்களில்