வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்.. இந்திய ரயிலில் புக் செய்து பயணித்த டென்மார்க் பயணிக்கு சர்ப்ரைஸ்

  • சென்னை: இந்திய ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதுவதை பார்க்க முடியும். அதிலும் வட இந்திய பக்கம் போனால் ரிசர்வேஷன் பெட்டியில் உள்ள இருக்கைகளை கூட முன்பதிவில்லா டிக்கெட் வைத்து இருப்பவர்கள் வந்து ஆக்கிரமித்து கொள்வதாக ஆதங்கப்படும் நிகழ்வுகளை அடிக்கடி பார்த்து இருக்கிறோம். இந்தியாவுக்கு சுற்றுலா வந்த டென்மார்க் பெண் பயணி ஒருவர் இந்திய ரயிலில் பயணம் செய்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

    Advertisement

    இன்ஸ்டாவில் பிரபலமான கண்டெண்ட் கிரியேட்டர் ஆக இருக்கக் கூடிய அந்த பெண் பயணி எம்மா ஹோல்ம் தனது பயணத்தை அனுபவத்தை பகிர்ந்த வீடியோ சமூக வலைத்தளங்க்ளில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதன் விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    இந்திய ரயிலில் பயணம்

    இந்திய ரயில்களில் டிக்கெட் புக்கிங் செய்வது கூட ஒரு சாசகச செயல்தான் என்று கூறியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டு இருக்கக் கூடிய பதிவில் கூறியிருப்பதாவது:- வெளிநாட்டு பயனியாக இந்தியாவில் ரயில் டிக்கெட் வாங்குவதே ஒரு தனிஅனுபவம். டிக்கெட்டை எப்படி முன்பதிவு செய்வது என்பதைக் கண்டறிந்த பிறகு... 'அப்பாடா! நமக்கு ரயில் டிக்கெட் கிடைத்துவிட்டது!' என்று நீங்கள் நினைக்கும் போது, மறுபடியும் ஒருமுறை யோசித்து கொள்ளுங்கள்.

    ஏனெனில் உண்மையில் உங்களுக்கான டிக்கெட் காத்திருப்போர் பட்டியலில் இருக்கலாம்.. சில சமயங்களில் மிக நீண்ட வெயிட்டிங் லிஸ்ட் ஆக கூட இருக்கலாம். நானும் எனது இரண்டு நண்பர்களும் டிக்கெட் புக் செய்தோம். இதில் ஒரு டிக்கெட்தான் கன்பார்ம் ஆனது. மீதமுள்ள இரண்டு டிக்கெட்டுகள் வெயிட்டிங் லிஸ்டில் இருந்தன. இருந்தாலும் மீதமுள்ள இரண்டு பேரும் ரயிலில் ஒருவழியாக ஏறிக்கொண்டனர்.

    Advertisement

    போதிய இடம் கிடைக்காமல்

    ரயிலில் முதலில் பயணிக்கும் போது போதிய இடம் கிடைக்காமல் ஒரே இருக்கையை பகிர்ந்து கொண்டோம். இரவு நேர பயணம் என்பதால் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. எனினும், சிறிது நேரத்தில் அதிர்ஷ்டவசமாக சில காலி படுக்கைகள் கிடைத்தன. இதனால், கொஞ்சம் சவுகர்யமாக பயணிக்க முடிந்தது. பலதரப்பட்ட மக்கள், வித்தியாசமான உணவுகள், தேநீர் விற்பனையாளர்கள் என இடைவிடால் பிசியாக இருந்தன.

    மக்கள், கலாச்சாரங்கள், உணவு மற்றும் தேநீர் விற்பனையாளர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் மற்றும் இடைவிடாத செயல்பாடுகள் நிறைந்த ஒரு துடிப்பான கலவையாக இந்த ரயில் பயணம் இருந்ததாக டென்மார்க் பயணி விவரித்தார். இந்த பயண அனுபவம் ஒருவிதக் குழப்பமானதாகத் தோன்றினாலும், இறுதியில் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் செட் ஆகி சிறப்பாக அமைந்தது.

    Advertisement

    வேறு எந்த நாட்டிலும் உணர முடியாது

    இந்திய ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில் மேற்கொண்ட பயண அனுபவம், எனக்கும் எனது நண்பர்களும் ஒருபோதும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளார். டென்மார்க் சுற்றுலாப் பயணியின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "இந்தியாவின் ரயில் பயணம் மட்டுமின்றி, விருந்தோம்பலும் உங்களால் ஒருபோதும் மறக்க முடியாத ஒன்றாக மாறிவிடும்.

    இங்குள்ள உபசரிப்பை வேறு எந்த நாட்டிலும் உங்களால் உணர முடியாது என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், 'நல்ல வேளையாக ஏசி பெட்டியில் போயிருக்கிறார்கள். சாதாரண ஸ்லீப்பர் கோச்சில் சென்று இருந்தால், உங்கள் அனுபவம் மோசமாக இருந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.

    English Summary

    Denmark Tourist: Indian trains are often teeming with crowds. Particularly on routes to North India, one frequently hears complaints about passengers holding unreserved tickets occupying seats in reserved coaches. A Danish woman visiting India as a tourist has shared her own experience of traveling on an Indian train.