தாம்பரம், ஆவடியில் இல்லத்தரசிகள் சற்றும் எதிர்பார்க்காதது.. சிலிண்டர் புக்கிங்கில் ட்விஸ்ட்

  • சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களே சிலிண்டர் புக்கிங் செய்து இன்னும் வராமல் இருக்கிறதா? ஏனெனில் பலர் இந்த சிரமங்களை சந்தித்து வருவதாக கூறுகிறார்கள். சமையல் கியாஸ் சிலிண்டர் பெறுவதில் தாமதங்களைச் சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. தாம்பரம், ஆவடி மாநகராட்சிப் பகுதிகளில் இல்லத்தரசிகள் பலர் சிலிண்டர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். அதேநேரம் சென்னையை சுற்றியுள்ள கிராமப்பகுதி மக்களோ 50 நாட்கள் வரை காத்திருக்கும் நிலை இருக்கிறது

    Advertisement

    மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் கியாஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதலில் தற்காலிக பாதிப்பாக இருந்த நிலையில், சர்வதேச அளவில் நீண்ட காலத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பிரச்சனை வளர்ந்துள்ளது இந்தியாவை பொறுத்தவரை எல்லா மாநிலத்திலும் சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பித்த பிரச்சனை இன்று வரை சரியாகவில்லை.. அதேநேரம் நிலைமையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    Advertisement

    அதன்படி சிலிண்டர் பெற்ற நாளில் இருந்து நகர்ப்பகுதிகளில் வசிப்பவர்கள் 25 நாட்களும், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 45 நாட்களுக்கு பிறகு தான் முன்பதிவு செய்ய முடியும் வகையில் சிஸ்டம் கொண்டுவரப்பட்டள்ளது. சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளான தாம்பரம், ஆவடி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சமையல் கியாஸ் முன்பதிவு செய்ய 25 நாட்களுக்கு பிறகு தான் முன்பதிவு செய்கின்றனர். அவ்வாறு முன்பதிவு செய்தவுடன் 4 மணி நேரத்திற்கு பிறகுதான் முன்பதிவுக்கான விண்ணப்பத்தை ஏற்பதா? அல்லது நிராகரிப்பதா? என்று தெரியவரும். அவ்வாறு விண்ணப்பித்தாலும் 2 அல்லது 3 முறை 4 மணிநேரத்திற்கு பிறகு அறிவிப்பதாக குறுஞ்செய்திகள் வருகிறதாம்.

    Advertisement

    அதனால் கூடுதலாக 2 நாட்கள் வரை சிக்கல் ஏற்படுகிறது.. அதன்பின்னர் 2, 3 நாட்கள் கழித்துதான் சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 30 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை தாமதம் ஏற்படுவதாக சொல்கிறார்கள். அதேநேரம் அந்த காலத்தில் கிராமம் என்ற அந்தஸ்தில் இருந்த சென்னையின் புறநகர் பகுதிகளில் 50 நாட்கள் வரை ஆகிறது. இதனால் சிலிண்டர் இல்லாமல் மக்கள் அவதிப்படும் நிலையும் அதிகமாக உள்ளது.

    பல குடும்பங்களில் 25 நாட்களுக்கு குறைவாக ஒரு சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு திண்டாட்டமாகிறது. கிராமங்களிலுமே 50 வரை எல்லாம் சிலிண்டர் எல்லா வீடுகளுக்கும் வருவது இல்லை.. இதனால் பலர் வீடுகளில் மின்சார அடுப்புகளை தேடுகிறார்கள். ஆனால் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டால் நிலைமை சிக்கலாகிறது. இதனால் பலர் கள்ளச் சந்தையில் சிலிண்டர்களை வாங்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.

    Advertisement

    இந்த தட்டுப்பாடு தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிப் பகுதியின் இல்லத்தரசிகளை அவதி அடைய வைத்துள்ளது. எனவே எண்ணெய் நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுத்து சிலிண்டர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    English Summary

    Homemakers in Tambaram and Avadi face hardships due to the unavailability of gas cylinders; residents across Chennai's suburbs are suffering from a shortage of cylinders.