சென்னை: நான்கு மாதங்களாக தலைமறைவாக இருந்த அன்பில் மகேஷின் ஆதரவாளர் முத்துக்குமார், தனது ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் நீதிமன்றத்தில் சரணடைந்தார். .தி.மு.க ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்க ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சரணடைந்த அவரது ஆதாரவாளர் முத்துக்குமாரை 12ம் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட பிற அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி நடந்ததாக ஏராளமான பள்ளி நிர்வாகிகள் குற்றம்சாட்டினார்கள். இதில் நிரந்தர அங்கீகாரம் கிடைக்காததால் கோடிகளில் ஏமாந்த பள்ளி நிர்வாகிகள் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் புகார் அளித்தனர். இந்த சூழலில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், சங்க மாநிலப் பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 26ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்பில் மகேஸுக்கு முன்ஜாமீன் வழங்க காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது "இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் தலைமறைவாக உள்ளார். அவரை அன்பில் மகேஷ் பாதுகாத்து வருகிறார். முத்துக்குமாரையும் அன்பில் மகேஸையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, அன்பில் மகேஸுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது." என காவல்துறை தரப்பில் வாதிட்டது காவல்துறையின் இந்த வாதத்தை ஏற்றுதான், அன்பில் மகேஸின் முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அன்பில் மகேஸ் உடனடியாக கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருககிறார். இதையடுத்து ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாக்கல் செய்த ஜாமீன் மனு, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ன்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இதனிடையே, தலைமறைவாக இருந்த முத்துகுமார் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது. முத்துகுமார் இன்று காலை சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன் சரண் அடைந்துள்ளார். அவரை நவம்பர் 12-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்த குற்றம் என்ன.. மறைக்கப்பட்டதா தீர்ப்பு? 20 பக்க தீர்ப்பு என்ன?
எர்ணாகுளம் நீதிபதியை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன.. தடை விதித்த கேரள உயர் நீதிமன்றம்