சென்னை: தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் அலுவலகம் மாற்றம் செய்யப்படுவது ஏன் என்பதற்கு பதில் அளித்தார். தலைமை செயலகம் கட்ட வேண்டும் என கலைஞர் நினைத்தார்கள். அம்மா ஜெயலலிதா அவர்கள் நினைத்தார்கள் என்றும், முதல்வரை சந்திக்க வருகின்றவர்கள் அமரும் இடம் இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை. எனவே அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு நல்ல வசதியான இடம் என்கின்ற ஒரு உணர்வுடன் தான் தன் அலுவலகத்தை மாற்ற நினைக்கிறார்" என்றார்.
முதல்வர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடமாற்றப்படுவது தொடர்பாகவும் டெண்டர் தொடர்பாக நாளிதழ்களில் வந்த செய்திகள் தொடர்பாகவும் எ.வ வேலு இன்று சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாத்தின் போது பல்வேறு கேள்விகளை எழுப்பி பேசினார். இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுத்தார். ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:-
தலைமை செயலகம் கட்ட வேண்டும் என கலைஞர் அவர்கள் நினைத்தார்கள். அதில் எதாவது உடன்பாடு இல்லாமல் இருக்கிறதா?.. அம்மா ஜெயலலிதா அவர்கள் புதிதாக தலைமை செயலகம் கட்ட வேண்டும் என நினைத்தார்கள். அதிலயும் உடன்பாடு இருக்கு.. ஏன் புதிதாக தலைமை செயலகம் கட்ட வேண்டும் என நினைத்தார்கள்? அரசு அலுவலர்களாக இருக்கட்டும்.. முதல்வர் விஜய் காலை 9.30 மணியில் இருந்து மாலை 5, 5.30 மணி வரை அலுவலகத்தில் இருக்கும் போது அவரை சந்திக்க வருகின்றவர்கள் அமரும் இடம் இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை. பல்வேறு அரசு தரப்பு ஊழியர்கள் ஆகட்டும், வெளிநாட்டு பிரதிநிதிகளாகட்டும், நம்முடைய விசிட்டர்களுக்கும் தெரியும்.. வெளிநாட்டில் இருந்து வரும் அதிகாரிகள் அமர்வதற்கான இடம் இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை. இதனால் தான் கலைஞரும் சரி, அம்மா அவர்களும் சரி புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டும் என சொன்னார்கள். முதல்வரின் வேலைப்பளு, புதிய திட்டங்களுக்காக அவரை சுற்றி கிட்டத்தட்ட ஒரு 200 பேர் இருப்பதனால், ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க, புதிய கட்டடம் கட்டுவதற்காக தனது அலுவலகத்தை எல்லாரும் அமரக்கூடிய வகையில் மாற்ற நினைக்கிறார். தான் மட்டும் நல்ல ரூமில் இருந்தால் போதாது, அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு நல்ல பரந்த இடம் வேண்டும் என்ற நல்ல உள்ளத்தினால் தான் அவர் தற்காலிகமாக ஒரு ஏற்பாடுக்காக தான் இதை மாற்ற நினைக்கிறார். இப்போது கூட நீங்க பார்க்கலாம். முதல்வருடைய எஸ் 1, எஸ் 2, எஸ் 3.. 100 சதுர அடி கூட இல்லாத ஒரு ரூமில் உட்கார்ந்து தான் அவர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். முதல்வருடைய பரந்த உள்ளம் அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு நல்ல வசதியான இடம் என்கின்ற ஒரு உணர்வுடன் தான் தன் அலுவலகத்தை மாற்ற நினைக்கிறார். அவரை சுற்று சுமார் 80 பேர் வேலை பார்க்கும் போது அங்கு சரியான கழிப்பறை வசதி கூட இல்லை. நீங்கள் இப்போது கூட பார்க்கலாம். இதுவும் தற்காலிகமாகத்தான். மற்ற உறுப்பினர்கள் சொல்லும் போது கூட அவருடைய வசதிக்காக இல்லை. அவருடைய தேவைக்காகவோ இதை செய்யவில்லை. இன்னைக்கும் நாங்க சொல்றோம். தேர்தல் பிரச்சாரம் போகும் போது, ஒரு சாதாரண் ஓட்டல், ஏன் வண்டியிலேயே சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கி செல்லும் சாதாரண, எளிமையானவர் தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தவறான தகவலை சபைக்கு தெரிவிக்க வேண்டாம் என்று சொல்கிறேன்." என்று கூறினார். தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் உள்ள 9-வது அறைக்கு மாற்ற முடிவு செய்தார். தலைமை செயலக வளாகத்திலேயே இருக்கக் கூடிய இந்த கட்டிடத்தில் முதல்வர் அலுவலக்த்தை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. முதல்வர் அறை, தனி செயலாளர்களுக்கான அலுவலகங்கள், ஆலோசனைக் கூட்ட அரங்கம் உள்ளிட்ட உள்ளிட்டவற்றை அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு தமிழக தலைமை செயல சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தது.கலைஞர், ஜெயலலிதாவே மாற்ற நினைத்தார்கள்..
எல்லாரும் அமரக்கூடிய வகையில்
முதல்வர் விஜய் எளிமையானவர்
அலுவலகத்தை இடமாற்றம் செய்ய விஜய் திட்டம்