ஆதார் கார்டில் முகவரி மாற்றணுமா? Address Proof இல்லையா? இதோ இந்த சூப்பர் வழி இருக்கே.. சிம்பிள்

  • சென்னை: ஆதார் இல்லாமல் ஒரு அணுவும் இன்று அசையாது என்ற நிலைமை வந்துவிட்டது.. அனைத்துக்குமே ஆதார் கார்டு ஆதாரமாகும்.. அதனால்தான், இந்த ஆதார் கார்டை அப்டேட்டாக வைத்து கொள்ள வேண்டியிருக்கிறது.. ஒருவேளை வீடு மாறிய பிறகு ஆதார் கார்டில் இருக்கும் பழைய முகவரியை மாற்ற வேண்டும் என்றால், புதிய முகவரிக்கான ஆவணம் தேவைப்படும். ஆனால், உங்கள் பெயரில் Address Proof இல்லாவிட்டால் என்ன செய்வது? முகவரி சான்று இல்லாமல் ஆதாரை புதுப்பிக்க முடியுமா?? இதோ அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

    Advertisement

    ஆதார் கார்டில் முகவரியை மாற்றுவதற்கு, புதிய முகவரியைக் கொண்ட சான்று ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட், பான் கார்டு, வங்கி கணக்குப் புத்தகம் அல்லது தபால் அலுவலக கணக்கு அறிக்கை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி அட்டை, ஊரக வேலை அட்டை போன்ற ஆவணங்களை பயன்படுத்தலாம்.

    Advertisement

    ஆதாரில் முகவரி மாற்றம்

    இதனைதவிர, கரண்ட் பில் ரசீது, தொலைபேசி அல்லது போஸ்ட்பெய்ட் செல்போன் பில், பிராட்பேண்ட் கட்டண ரசீது, தண்ணீர் கட்டண ரசீது, எரிவாயு இணைப்பு ஆவணம், ஆயுள் அல்லது மருத்துவக் காப்பீட்டு ஆவணம் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

    ஆனால், மின்சாரம், தொலைபேசி, தண்ணீர் மற்றும் எரிவாயு தொடர்பான கட்டண ரசீதுகள் 3 மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது. சொத்து வரி ரசீது ஓராண்டுக்கு மேல் பழையதாக இருக்கக்கூடாது. குடியிருக்கும் வீட்டின் பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம் அல்லது தானப் பத்திரம், பதிவு செய்யப்படாத வாடகை அல்லது குத்தகை பத்திரம் போன்றவற்றையும் முகவரிச் சான்றாக பயன்படுத்தலாம்.

    Advertisement

    Address Proof இல்லாவிட்டால்?

    மேலே சொல்லப்பட்ட வழக்கமான முகவரி சான்று ஆவணங்கள் எதுவுமே இல்லாதவர்களுக்கும் ஒரு மாற்று வழி உள்ளது. அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழை பயன்படுத்தி ஆதார் முகவரியை மாற்றிக்கொள்ள முடியும்.

    இந்தச் சான்றிதழை நாடாளுமன்ற உறுப்பினர் (MP), சட்டப்பேரவை உறுப்பினர் (MLA), அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி (Gazetted Officer), வட்டாட்சியர் (Tehsildar) உள்ளிட்டோரிடம் இருந்து பெறலாம்.

    சான்றிதழில் என்ன இருக்க வேண்டும்?

    இந்த முகவரிச் சான்றிதழ், அதை வழங்கும் அதிகாரியின் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் முகவரி இடம்பெற்ற Letter Head-ல் இருக்க வேண்டும். அதில் முகவரியை மாற்ற விரும்பும் நபரின் பெயர், போட்டோ மற்றும் புதிய முகவரி போன்றவை இடம்பெற்றிருக்க வேண்டும்.

    Advertisement

    மேலும், அரசு அதிகாரி முறையாக கையெழுத்திட்டு வழங்கியிருக்க வேண்டும். இவ்வாறு பெறப்படும் புகைப்படத்துடன் கூடிய முகவரி சான்றிதழை பயன்படுத்தி ஆதார் கார்டில் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

    அதனால் "என் பெயரில் Address Proof இல்லை; அதனால் ஆதார் முகவரியை மாற்ற முடியாது" என்றெல்லாம் இனி நினைக்க வேண்டாம். வழக்கமான ஆவணங்கள் இல்லாதவர்களுக்கும் அரசு அதிகாரிகளின் சான்றிதழ் மூலம் முகவரியை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. வீடு மாறியவர்கள் தங்களது ஆதார் முகவரி சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து, தேவையானால் புதுப்பித்துக்கொள்வது நல்லது.

    English Summary

    Aadhaar Address Update.. No Address Proof? Here Is the Simple Way to Change Your Aadhaar Address