ப்ரண்ட்ஸ்.. மரகதம் குமரவேல் கட்சி தாவியதற்கு பதிலடியாக ஆதவ் என்ன கொண்டுவந்திருக்காரு பாருங்க!

  • சென்னை: மதுராந்தம் தொகுதியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் நிற்க வைக்கப்பட்ட தவெக வேட்பாளரை, அதிமுக விலை கொடுத்து வாங்கிவிட்டது என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

    Advertisement

    மதுராந்தகத்தில் அதிமுக சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்தான் மரகதம் குமரவேல். ஆனால், இவர் திடீரென தவெகவுக்கு தாவி.. தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே இந்த தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடக்கிறது.

    Advertisement

    இப்படி இருக்கையில், பிரச்சாரத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, "எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமிக்கு எதிராக போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளரை விலைக்கு வாங்கி, தேர்தலில் நிற்க வைக்காமல் தவிர்த்து, தேர்தல் முடிந்தவுடன் அவரை அதிமுகவில் சேர்த்தீர்களே! இதுதான் சூழ்ச்சி. எங்களுக்கு சூழ்ச்சி தெரியாது" என்று கூறியிருக்கிறார்.

    இடைத்தேர்தலுக்கு காரணமே இந்த கட்சித்தாவல்தான். தங்களது சுயநலத்துக்காக, வெற்றிப்பெற்ற சில நாட்களிலேயே எம்எல்ஏக்கள் இன்னொரு கட்சியில் சேர்ந்து.. மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயல். மட்டுமல்லாது இது மக்களாட்சியை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த தேர்தல் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்த நிலையில்தான் அதிமுக ஆதரவு அதிகமுள்ள மதுராந்தகம் தொகுதியில் எடப்பாடி தொகுதியில் நடந்த தில்லுமுல்லுவை நினைவூட்டி மரகதம் குமாரவேலுக்கு மாரல் சப்போர்ட் கொடுத்துள்ளார் ஆதவ்.

    English Summary

    Aadhav Arjuna alleges EPS: A by-election is set to be held soon in the Maduranthakam constituency. Meanwhile, Minister Aadav Arjuna, while campaigning in the area, alleged that the AIADMK had "bought" the TVK candidate who was slated to contest from the Edappadi constituency in the 2026 Assembly elections. His allegation has sparked a debate.