ஓரணியில் வந்த ஆதவ் அர்ஜுனா, அன்புமணி! அதுக்குள்ள மாற்றமா? நேரு உள்விளையாட்டு அரங்கில் சம்பவம்!


  • சென்னை: தவெக கூட்டணிக்குள் விரைவில் பாமக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் சேர்ந்து.. பேட்மிண்டன் விளையாடியது கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    தமிழக அரசியல் களம் யாரும் எதிர்பார்க்காத மாற்றத்தை சந்தித்திருக்கிறது. தற்போது தவெகவுக்கு ஆதரவளித்து வரும் கட்சிகளின் லிஸ்ட்டில் பாமக இணையலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது.

    Advertisement

    தமிழக அரசியல் களம்

    சட்டமன்ற தேர்தலில் தவெக பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இருப்பினும் தனிப்பெரும்பான்மை பெற முடியாததால், விஜய்யால் முதலமைச்சராக முடியவில்லை. இப்படி இருக்கையில்தான் காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயுஎம்எல், விசிக ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்திருந்தன. இதன் காரணமாக விஜய் முதலமைச்சராக பதவியில் அமர்ந்தார். ஆனாலும், தவெகவுக்கு சிக்கல் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது.

    விசிகவும், கம்யூனிஸ்டுகளும்

    தவெகவுக்கு ஆதரவளித்த கட்சிகளில் காங்கிரஸ், ஐயுஎம்எல், விசிக ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுவிட்டன. கம்யூனிஸ்டுகள் மட்டும் அமைச்சரவையில் இல்லை. வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவு என்கிற நிலைபாட்டை எடுத்திருக்கின்றனர். பிரச்சனையே இதுதான். தவெக அரசு தான் விரும்பிய சட்டத்தை அமல்படுத்த முயன்றால்.. உடனே கம்யூனிஸ்டுகள் ஆதரவை வாபஸ் பெற்று ஆட்சியை கவிழ்ப்பார்கள் என்கிற அச்சம் விஜய்க்கு இருந்துக்கொண்டே இருக்கிறது.

    Advertisement
    அவதூறுக்கு பதில்.. கலவரத்தை தூண்டுவதாக வழக்கு போடுவதா? தவெக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

    விசிகவுக்கு மாற்று

    அதேபோல ஆட்சி அதிகாரத்தில் பங்கு எடுத்திருக்கும் விசிகவும், அரசுக்கு ஓவர் நெருக்கடியை கொடுத்து வருகிறது. தவெகவுக்கு பட்டியல் சமூக மக்களின் ஆதரவு இருக்கிறது. இருந்தாலும் விசிகவை பக்கத்தில் வைத்திருப்பது கூடுதல் பலமாக அக்கட்சி கருதுகிறது. ஆனால்.. கட்சி மேலும் விரிவடைய வேண்டும் எனில், வன்னியர் சமூக மக்களின் ஆதரவும் அவசியம். இதற்காக பாமகவை உள்ளே கொண்டுவர தவெக ஒரு பக்கம் யோசித்து வருகிறது.

    லஞ்சம் பெற்ற முன்னாள் தவெக நிர்வாகி அதிரடி கைது! கை மாறிய ரூ.1.30 லட்சம்!
    Advertisement

    சூழல் இப்படி இருக்கையில்தான், இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அன்புமணி இருவரும் சேர்ந்து பேட்மிண்டன் விளையாடி இருக்கிறார்கள். அப்படியெனில், தவெக கூட்டணியில் பாமக ஐக்கியமாவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதா? என்கிற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.

    English Summary

    Aadhav Arjuna and Anbumani: Amidst speculation that the PMK might soon join the TVK alliance, a joint badminton match played today by Minister Aadav Arjuna and PMK leader Anbumani Ramadoss at the Nehru Indoor Stadium has drawn attention.