கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை.. கள்ளக்குறிச்சியில் விஜய் அரங்கேற்றும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ்

  • கள்ளக்குறிச்சி: தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் பல்வேறு துறைகளில் சர்ப்ரைஸ் ஆய்வுகளை செய்து வருகிறார்கள். சர்ச்சைகள் ஆங்காங்கே இருந்தாலும் தவெக பல நல்ல மாற்றங்களையும் அரங்கேற்றி வருகிறார்கள். போதையில்லா தமிழகம் என்கிற இலக்குடன் தவெக பயணிக்கிறது. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக தனிப்படை அமைக்க விஜய் உத்தரவிட்டுள்ளதாக கள்ளக்குறிச்சியில் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

    Advertisement

    அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசும்போது, "தமிழகத்தின் வட மாவட்டங்களில் மது பழக்கம் அதிகமாக உள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போதை பழக்கம் அதிகமாக உள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அதிகமாக உள்ளது. கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயத்தால் 75க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

    Advertisement

    அப்போதே சென்னை உயர் நீதிமன்றம் அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் கல்வராயன்மலையில் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மிகவும் வறுமையில் உள்ள கள்ளக்குறிச்சியில் 3 மிகப்பெரிய பிரச்சனைகள் உள்ளன. கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளோம். உயர்கல்வியில் கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலையில் குறைவாக உள்ளது. இங்கு பலரும் உயர்கல்வி படிப்பதே இல்லை. கல்வராயன் மலையில் மருத்துவமனை கட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

    கல்வராயன் மலையில் இளம் வயது திருமணங்கள் அதிக நடைபெறுகின்றன. கல்வராயன் மலையில் விளையாட்டு மையம் தொடங்கப்படும். மக்களின் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்ய வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது. பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும். அரசின் அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும். போதையில்லாத தமிழகத்தை உருவாக்குவதே முதலமைச்சரின் இலக்கு.

    Advertisement

    கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் முதலமைச்சர் தனிப்படை அமைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். அந்தப்படை கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
    அந்த தனிப்படை கள்ளக்குறிச்சி போன்ற கள்ளச்சாராயம் அதிகம் பயன்பாட்டில் உள்ள பகுதிகளில் நடவடிக்கை எடுப்பார்கள். தவெக சார்பில் தேர்தலில் வாக்குறுதியாக கொடுக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் விரைவில் தொடங்கப்படும். எங்களின் முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் அரசு அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    English Summary

    Aadhav Arjuna: Miniter Aadhav Arjuna said, Chief Minister Vijay ordered to form special team against Illicit liquor across Tamilnadu.