தமிழ்நாட்டை லாட்டரி குடும்பம் ஆளத் துடிக்கிறது.. ஆதவ் அர்ஜுனா ஒரு செல்லாக்காசு.. ஆர்.எஸ்.பாரதி!

  • சென்னை: லாட்டரி குடும்பம் தமிழ்நாட்டை ஆளத் துடிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். திமுக ஒரு வற்றாத ஜீவ நதி என்று கூறிய ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒரு அணியில் இருந்து வெற்றிபெற்றுவிட்டு, மற்றொரு அணியில் சேர்ந்து அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து களமிறங்கிய காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள், தவெக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளன. இதன் மூலமாக திமுக தமிழக அரசியல் தனித்துவிடப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் விஜய் அலை வீசுவதாக அக்கட்சியினர் பேசத் தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுகவின் நிலைப்பாட்டை தெளிவாக ஸ்டாலின் சொல்லிவிட்டார். ஆட்சிக்கு இடையூறாக இருக்க மாட்டோம். காங்கிரஸ் கட்சி எங்கள் கூட்டணியில் இருந்து சென்றதற்கு யாருக்கும் வருத்தம் இல்லை. விசிக மற்றும் ஐயூஎம்எல் எங்கள் கூட்டணியில் தொடர்கிறோம் என்றார்கள்.

    தற்போது அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளதால், அவர்களின் நிலைப்பாடு குறித்து அவர்களே கூற வேண்டும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலும் ஒரு விதமாக இருக்கும். திமுக-வின் வாக்கு வங்கியும், சித்தாந்த பலமும் அப்படியேதான் இருக்கிறது. சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் மக்களின் ஆதரவை ஒருபோதும் பெற முடியாது.

    Advertisement

    திமுக என்பது வற்றாத ஜீவநதி; தேர்தலுக்கு முன்பு கூட எங்களை இத்தனை பேர் வந்து பார்க்கவில்லை, ஆனால் தற்போது அறிவாலயத்திற்கு அவ்வளவு பேர் வருகிறார்கள். அவ்வப்போது சிலர் வந்து இளைப்பாறி செல்வார்கள். திமுகவுக்கு இப்படிப்பட்ட அதிர்ச்சிகள் புதிதல்ல. மேலும் பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் திமுக தோற்றுள்ளது. 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக இரண்டே இடங்களில் தான் வெற்றி பெற்றிருந்தது.

    ஆனால் 1996-ல் 173 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டை லாட்டரி குடும்பம் ஆளத் துடிக்கிறது. பெரியார், அண்ணா, காமராசர், ராஜாஜி, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் அரசியல் செய்த தமிழ்நாடு ஒரு லாட்டரி குடும்பம் கையில் சிக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Aadhav Arjuna: DMK Organizing Secretary R.S. Bharathi has criticized the "Lottery Family is very eager to capture Tamil Nadu