கரூர் கூட்ட நெரிசலுக்கு திமுக தான் காரணம்.. ஆதவ் அர்ஜுனா பேச்சு.. உச்சநீதிமன்றம் செல்லும் அறிவாலயம்!

  • சென்னை: கரூரில் காவல்துறையை வைத்து திமுக மக்களை கொன்று குவித்ததாக பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட திமுக முடிவு செய்துள்ளது. சிபிஐ எஃப்ஐஆரில் ஆதவ் அர்ஜுனா பெயரும் இடம்பெற்ற நிலையில், அவரே காவல்துறையையும், திமுகவையும் குற்றம்சாட்டி பேசியது சர்ச்சையாகி இருக்கிறது.

    Advertisement

    அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் நேற்று இணைந்தனர். இந்த இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், எங்களுக்கு கரூர் கணக்கு ஒன்று உள்ளது. அதனை முடிக்காமல் விட மாட்டோம். சட்டம் தனது கடமையை செய்யும். கரூரில் கூட்ட நெரிசலை காவல்துறையை வைத்து உருவாக்கினார்கள்.

    Advertisement

    விஜய் மீது கை வைத்தீர்களே, மக்களை கொன்று குவித்தீர்களே.. அதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம்.. கடைசி 15 நாட்கள் விஜய் ஏன் பல ஊர்களுக்கு செல்லவில்லை என்றால், அதற்கு காரணம் இருக்கிறது. கரூர் கண்ணீருக்கு காரணமாக இருந்த பாவத்துக்காக தான் ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வி அடைந்தார் என்று குற்றம்சாட்டினார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்று 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்த விசாரணையை உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ தீவிரமாக நடத்தி வருகிறது. தவெக தலைவர் விஜய் 2 முறை சிபிஐ முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

    Advertisement

    இன்னொரு பக்கம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது நேரடியாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமும் சுமார் 5 நாட்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சட்டசபைத் தேர்தலுக்கு பின் இந்த விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே கரூர் சம்பவத்திற்கு காவல்துறையையும், திமுகவும் தான் காரணம் குற்றம்சாட்டி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இந்த நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேசிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட திமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை நடந்து வரும் சூழலில், ஆதவ் அர்ஜுனா இப்படி பேசி இருப்பது தவெகவுக்கு பின்னடைவாக மாறி இருப்பதாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Aadhav Arjuna: DMK to Move Supreme Court Against Aadhav Arjuna Over Mass Murder Allegations in Karur Stampede