முத்துராமலிங்கம் தேவர் என்ற முழுப்பெயரை சொல்லாமல் தவிர்த்த ஆதவ் அர்ஜுனா.. சீனுக்குள் வந்த சாட்டை!

  • சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119வது ஜெயந்தி விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரின் ஜெயந்தி விழாவையொட்டி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிவிட்டுள்ள ஒரு பதிவு சர்ச்சையாகி இருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற அவரின் முழுப்பெயரை சொல்லாமல், முத்துராமலிங்கம் என்று மட்டுமே ஆதவ் அர்ஜுனா கூறி இருப்பது விவாதமாகி உள்ளது.

    Advertisement

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119வது ஜெயந்தி விழா தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி முதல்வர் விஜய் சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    Advertisement

    இந்த நிலையில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிவிட்டு ஒரு பதிவு சர்ச்சையாகி இருக்கிறது. அதில் ஆதவ் அர்ஜுனா, இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தீரமிகு போராட்டத்தை முன்னெடுத்தவர்; நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பக்கபலமாக இருந்து வலிமையான விடுதலைப் படையைக் கட்டியவர்.

    மக்கள் மனங்களில் போற்றத்தக்கத் தலைவராகவும் மக்கள் மன்றங்களில் வியக்கத்தக்க ஆளுமையாகவும் விளங்கியவர். எளிய மக்களின் முன்னேற்றம் மற்றும் சமய நல்லிணக்க சமூகத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கம் பெருமகனார் புகழைப் போற்றுவோம் என்று பதிவிட்டுள்ளார். இதில் முத்துராமலிங்கத் தேவர் என்ற முழுப்பெயரை பதிவிடாமல் ஆதவ் அர்ஜுனா தவிர்த்துள்ளார்.

    Advertisement

    இது முக்குலத்தோர் சமூக மக்களிடையே விவாதமாகி உள்ளது. இதுதொடர்பாக நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் பக்கத்தில், முத்துராமலிங்கத்தேவர் என்பது அவருடைய சான்றிதழில் உள்ள பெயர் அந்தப் பெயரிலேயே அவர் வரலாற்றில் அழைக்கப்பட்டுள்ளார். முத்துராமலிங்கம் என நீங்கள் சுறுக்குவதால் உங்களை சாதிக்கு எதிரானவர் என்றும் பெரிய சமூக புரட்சியாளர் என்று காட்ட முடியுமென்றால்..

    முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்!

    ஜி.டி. நாயுடுவை அழைக்கும் போது நாயுடுவை தூக்கிவிட்டு அழைப்பீர்களா? மாயூரம் வேதநாயகம் பிள்ளையை எப்படி அழைப்பீரகள்? ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியாரை எப்படி அழைப்பீர்கள்? இன்றைய காலகட்டதில் சாதிப்பெயரை பெயருக்கு பின்னால் போடாத நிலை உருவாகியிருக்கிறது.
    முன்னோர்களை அவர்கள் இருந்த அடையாளத்துடன் அழைப்பதில் என்ன சாதிய அழிப்பை செய்துவிட முடியும் ?

    Advertisement

    முத்துலெட்சுமி ரெட்டியை நீங்கள் முத்துலெட்சுமி என்றுதான் அழைத்தீர்களா ஆதவ்? சந்திரபாபு நாயுடுவை ஒருமுறை சந்திரபாபுன்னு அழைத்து பாருங்களேன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மறைந்த தலைவர்களை அவர்களின் முழுப்பெயருடன் தான் அத்தனை கட்சிகளும் அழைத்து வரும் நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் பதிவு சர்ச்சையாகி இருக்கிறது.

    English Summary

    Aadhav Arjuna Omits ‘Thevar’ from Pasumpon Muthuramalinga Thevar Name Sparks Controversy