ஆதவ் VS கேஎன் நேரு! சட்டசபையில் நேரு விடுத்த கோரிக்கை.. ‘அண்ணன்’ எனச் சொல்லி பதிலளித்த ஆதவ் அர்ஜுனா

  • சென்னை: வழக்கம்போல் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் முன்னாள் அமைச்சர் கேஎன் நேருவின் கோரிக்கைக்கு உடனடியாக பதில் அளித்து இருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. மேலும், ரிஸ்ஸ் விவகாரம் தொடர்பாக கேஎன் நேருவின் குற்றச்சாட்டுக்கும் சபாநாயகர் பதிலளித்தார்.

    Advertisement

    இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்பு இன்று தமிழக சட்டசபை, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தலைமையில் மீண்டும் கூடியது. இன்றைய நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண் துறை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.

    Advertisement

    மேலும் 2027 பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில் வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

    பிறகு, கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்" திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டை விளையாட்டுத்துறையின் தலைநகராக மாற்றும் நோக்கில், செம்மஞ்சேரியில் 128 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.261 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் அமைக்க திட்டமிடப்பட்ட 'குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி' திட்டத்தை த.வெ.க. அரசு ரத்து செய்தது ஏன்? செம்மஞ்சேரி சர்வதேச குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்தை த.வெ.க. அரசு கைவிட்டதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

    Advertisement

    தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா," விளையாட்டுத்துறை மானிய கோரிக்கையில் விளையாட்டு துறைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, முதலமைச்சர் எப்படி கொள்கையை உருவாக்கி வருகிறார் என்பதை விரிவாக பதிவு செய்துள்ளோம். தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாங்கியதில்லை. 10 ஒலிம்பிக் மையங்கள் உருவாக்கப்படும்" என்றார்.

    தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கேஎன் நேரு எழுந்து பேசுகையில்," திருச்சியில் சன்மா நகர் தொடங்கி, வயலூர் முருகன் கோவில் செல்லும் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக இருக்கிறது. சுமார் 30000 வீடுகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் நிலையில் அடிக்கடி மக்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது.

    Advertisement

    மேலும் அங்கு அதிக அளவில் பள்ளி கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. அதனால் அந்த அங்கு கடந்த ஆட்சியில் 138 கோடி ரூபாய் செலவில் 60 அடி சாலையை அமைக்க திட்டம் கொண்டுவரப்பட்டது தற்போது திட்டம் தற்போது நிலுவையில் இருக்கிறது. தற்போது அங்கு போக்குவரத்து நெரிசல் இருப்பதால் அந்த சாலையை அமைத்தால் சிறப்பாக இருக்கும். தற்போது அமைச்சர் அதற்கு முன்னுரிமை தந்து செய்து தர வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

    அப்போது எழுந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேஎன் நேருவை 'அண்ணன்' என குறிப்பிட்டு, மானிய கோரிக்கையில் சில அறிவிப்புகளை தான் வெளியிட முடியும். அண்ணன் கொடுத்த சாலை தொடர்பான டிபிஆர் வேலைகள் முடிவடைந்து விட்டது. வேலை திட்ட பட்டியலில் அந்த திட்டமும் இருக்கிறது. கூடிய சீக்கிரம் இது தொடர்பான நல்ல அறிவிப்பு வரும்" என்றார்.

    English Summary

    Minister Aadhav Arjuna assures KN Nehru that a key Trichy road project will receive priority soon.