சென்னை: தாராபுரம் அதிமுகவுக்கும், மதுராந்தகம் திமுகவுக்கும் என இரு கட்சிகள் அவர்களுக்குள் பிரித்துக்கொண்டன என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், ரிசல்ட்டை பார்க்கும்போது கடந்த தேர்தலை போலவே இரு கட்சிகளும் வாக்குகளை வாங்கியிருக்கின்றன. அப்படியெனில் ஆதவ் சொன்னது உண்மைக்கு மாறான தகவலா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
இடைத்தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளும் ரகசிய கூட்டணி அமைத்துள்ளன என்று ஆதவ் அர்ஜுன விமர்சித்திருந்தார். அதாவது தாராபுரத்தில் திமுக அதிமுகவுக்காகவும், மதுராந்தகத்தில் அதிமுக திமுகவுக்காகவும் மறைமுக ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படும் என்று கூறியிருந்தார்.
ஆதவ் சொல்வது உண்மையாக இருந்தால்.. மதுராந்தகத்தில் அதிமுகவும், தாராபுரத்தில் திமுகவும் கடும் பின்னடைவை சந்தித்திருக்க வேண்டும். தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இரு கட்சிகளும் தங்களின் வாக்கு வங்கியை அப்படியே தக்க வைத்துக்கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. மதியம் 12 மணி நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் 7 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்திருக்கிறது. தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 27,460 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். வாக்குகளை பெற்றிருக்கின்றனர். ஆதவ் அர்ஜுனா சொல்வதை போல இரண்டு கட்சிகளும் தங்களுக்குள் பேசி தேர்தலை எதிர்கொண்டார்கள் எனில், திமுக-அதிமுகவுக்கு வெறும் 2,000 வாக்குகள்தான் வித்தியாசப்பட்டிருக்குமா? என்று பலரும் கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் என ரிசல்ட் வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தாராபுரம் தொகுதியில் தற்போது 11 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்திருக்கிறது. தவெக வேட்பாளர் சத்தியபாமா 31,327 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். வாக்குகளை பெற்று அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். கடந்த தேர்தலில் வாக்குகளை பெற்றிருந்தன. இதை தற்போதைய வாக்கு நிலவரத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, கடந்த தேர்தலில் இரண்டு கட்சிகளும் எவ்வளவு வாக்குகளை வாங்கியதோ அதற்கு நெருக்கமான அளவில்தான் வாக்குகளை இப்போதும் வாங்கியிருக்கின்றன. எனவே ஆதவ் அர்ஜுனா சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.