தென்னகத்திலிருந்து ஒரு பிரதமர்.. காங்கிரஸுக்கு எந்த பிரச்சினையும் இல்லை! தாகூர் முன் உடைத்த ஆதவ்!

  • சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை எனவும், கூட்டணியில் பிரிவினை வரப்போகிறதா என்ற பேச்சு நேற்றோடு முடிந்து விட்டது என அமைச்சர் அதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் ஆதரவுக் கட்சிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    Advertisement

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், இந்த யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனைக கூட்டம் முடிவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் கூட்டணி அமைத்து வருகிற இடைத்தேர்தலை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டதோடு, கூட்டணிக்கு மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது. ஆலோசனை கூட்டம் நிறைவுக்குப் பின்னர் கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா," தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் கூட்டணி அமைத்து வருகிற இடைத்தேர்தலை சந்திக்க உள்ளோம். இன்று மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணி தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது அல்ல.

    பெரியார், அண்ணா கொள்கை வழியில் மக்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. மதச்சார்பின்மை சமூக நீதி கொள்கை எங்கு உள்ளதோ அங்கு வெற்றி இருக்கும். மதச்சார்பின்மையும் சமூக நீதியும் எங்கு இருக்குமோ அங்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் எண்ணம் இருக்கும் என நம்புகிறோம். காங்கிரஸ் கட்சிக்கு இந்த கூட்டணியில் எந்த முரண்பாடுகளும் இல்லை.

    Advertisement

    கூட்டணி உறுதி செய்யப்பட்டு பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கூட்டணி என்றால் எல்லாருக்கும் ஒரு பொதுக் கருத்து இருக்கும். ஒவ்வொரு கூட்டம் நடக்கும் போதும் யாட் வேட்பாளர் என்ன என்பதை தெரிவிக்கப் போகிறார்கள். எங்களுக்குள் பிரிவினை வரப்போகிறதா என்ற கேள்வி நேற்றோடு முடிந்து விடது. எதிர்காலத்தில் தென் மாநிலங்களில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என்பது எண்ணம்.அது எதிர்கால எண்ணம். தற்போது கூட்டணி உருவாகி விட்டது. இப்போது தமிழகத்திற்கு என்ன தேவையோ அதற்கு கூட்டணி உருவாகியுள்ளது ஒவ்வொரு தேர்தலின் போதும் கூட்டணி முடிவு எடுக்குமம்" என்றார்.

    Advertisement

    தொடர்ந்து பேசிய அமைச்சர் அருண் ராஜ், மதசார்பற்ற சமூக நீதி வெற்றி என்ற கூட்டணியின் பெயரிலேயே எல்லாமே உள்ளது. மக்களுக்காக அமைந்த கூட்டணி இது இந்த கூட்டணிக்கு இயல்பாகவே பெயர் அமைந்துள்ளது. கூட்டணியின் பெயர் ஒரு புரட்சிகரமான அறிவிப்பு" என்றார்.

    English Summary

    Minister Aadhav Arjuna says Congress has no differences with TVK alliance and supports the idea of a future Prime Minister from South India.