எங்க வரலாறு தெரியுமா.. ஆதவ் அர்ஜுனா படிக்க வேண்டும்.. விஜய்க்கும் சொல்லுங்கள்.. வீரபாண்டியன் பதிலடி!

  • சென்னை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரம் கிடைக்கும் போது கம்யூனிஸ்ட்களின் வரலாற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார். ஆதவ் அர்ஜுஇனா படித்துவிட்டு முதல்வர் விஜய்க்கும் அதனை சொல்ல வேண்டும் என்று கூறிய வீரபாண்டியன், நூற்றாண்டு கால வரலாற்றில் ஒரு கம்யூனிஸ்ட் கூட ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அண்மையில் மதுராந்தகம் தொகுதி தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறையில் ஊழல் நடக்கவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சியினரால் சொல்ல முடியுமா என்று சவால்விட்டார். தொடர்ச்சியாக அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோரும் கம்யூனிஸ்ட் கட்சியினரை சீண்டி வருகின்றனர்.

    Advertisement

    இதனால் தவெக - கம்யூனிஸ்ட்கள் இடையே வார்த்தை மோதல்கள் வலுத்து வருகிறது. இதனால் இடைத்தேர்தலுக்கு பின் தவெகவுக்கு அளித்து வரும் ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சிகள் திரும்ப பெறும் வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் விவரங்கள் சேகரிப்பது, கம்யூனிஸ்ட் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவது என்று இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளது.

    இப்படியான சூழலில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது அமைந்திருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் பேசுகையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் பணம் வாங்கினார்கள் என்ற கருத்து மிகமிக தவறானது, பிழையானது.

    Advertisement

    நூற்றாண்டு கால அரசியல் வாழ்வில் நாங்கள் எங்கும் கையூட்டு பெற்றதும் இல்லை.. அதனை வேடிக்கை பார்த்ததும் இல்லை. அதனால் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரம் கிடைக்கும் பொது கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை கொஞ்சம் புரட்டி பார்க்க வேண்டும். நீங்கள் படித்து கொஞ்சம் முதல்வர் விஜய்க்கும் சொல்ல வேண்டும்.

    இந்தியாவில் 85 லட்சத்திற்கும் அதிகமான நீதிமன்றங்கள் உள்ளன. ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் கூட ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டதில்லை. நேரம் கிடைக்கும் போது ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெகவினர் கம்யூனிஸ்ட் வரலாற்றை படிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Aadhav Arjuna Should Read Communist History When He Finds Time, Says CPI State Secretary Veerapandian