வருத்தம் தெரிவித்த நடிகர் தனுஷ்.. இது யாருடைய தவறு? ‘ஓம்' இசை வெளியீட்டு விழாவில் நடந்த சோகம்

  • சென்னை: ''இது யாருடைய தவறு? என்று ஆராய விரும்பவில்லை.. நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்'' என்று நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை தாம்பரத்தில் நேற்று நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள 'ஓம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த முடிந்த பிறகு அவர் இப்படி பதிவிட்டதற்கான காரணம் பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    நடிகர் தனுஷ் 'ஓம்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் மம்மூட்டி, சாய் பல்லவி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ியக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார்.

    Advertisement

    இந்த திரைப்படம் நவம்பர் 20 ம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் இன்று நடந்தது.

    இந்த விழாவிற்கு நடிகர் தனுஷின் நற்பனி இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் ஏராளமாக குவிந்தனர். நடிகர் தனுசை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர்கள் குவிந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு நுழைவுச்சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதிகமான கூட்ட நெரிசலால் ஆடிட்டோரியம் நிரம்பியது.

    இதனால் 'கேட்'டை இழுத்து போலீசார் பூட்டினர். கூட்ட நெரிசல் காரணமாக நுழைவுச்சீட்டு வைத்திருந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் தான் நடிகர் தனுஷ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை... நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு'' என்று கூறியுள்ளார்.

    English Summary

    "I do not wish to analyze whose fault this is; I take full responsibility and express my regrets," actor Dhanush posted on his X (formerly Twitter) account. Here, we look into the reasons behind this statement, which followed the audio launch event for the upcoming film 'Om'-starring Dhanush-held yesterday in Tambaram, Chennai.