Mohan Sharma: விஜய்யை சந்திக்க நடிகை லட்சுமியின் Ex கணவர் முயற்சி! யார் இந்த நடிகர் மோகன் சர்மா?

  • சென்னை: ஒரு காலத்தில் போயஸ் கார்டனில் வீடு வைத்திருந்த நடிகர் மோகன் சர்மா, தற்போது ஆதரவற்றோர் இல்லத்தில் மருந்து வாங்கக் கூட காசு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறாராம். இதனால் அவர் முதல்வர் விஜய்யை சந்தித்து தனது குறைகளை கூற வேண்டும் என முயற்சித்து வருகிறார்.

    Advertisement

    தமிழ் உள்பட பல்வேறு தென்னிந்திய மொழி சினிமாக்களில் நடித்தவர் மோகன் சர்மா. புனே திரைப்படக் கல்லூரியில் படித்த முதல் தென்னிந்தியர். இவர் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்.

    Advertisement

    இப்போது ஆதரவற்றவர்களுக்கான இல்லத்தில் வசித்து வருகிறார். ஒரு காலகட்டத்தில் இவர் போயஸ் கார்டனில் சொந்தமாக வீடு வைத்திருந்தார். இவர் சம்பாதித்த சொத்துகள் எல்லாம் எங்கே போனது என்பதை பார்க்கலாம்.

    நடிகர் மோகன் சர்மா வேறு யாருமில்லை, திரைப்பட நடிகை லட்சுமியின் முன்னாள் கணவர் ஆவார். இருவரும் சேர்ந்து 5 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

    ஜெய்சங்கர் முதல் சரத்குமார் வரை பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் தொடர்ந்து சினிமாவில் நடித்திருந்த நிலையில் திடீரென பட வாய்ப்புகள் குறைந்தது. இதனால் அவர் தனது பார்வையை சீரியல்கள் பக்கம் திரும்பினார்.

    Advertisement

    கோலங்கள், முந்தானை முடிச்சு, வாணி ராணி, மாயா, தாலாட்டு உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார். இதையடுத்து அவர் 2012 ஆம் ஆண்டு " நம்ம கிராமம்" என்ற ஒரு படத்தையும் இயக்கி தயாரித்திருந்தார். அந்த படம் தமிழகம், கேரள அரசுகளின் விருதுகளை பெற்றது.

    பல்வேறு மொழிகளில் நடித்த இவர் 3 முறை தேசிய விருதுகள் வழங்கும் குழுவில் ஜூரியாகவும் இருந்துள்ளார். லட்சுமியை விவாகரத்து செய்த நிலையில் சாந்தி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ஒரு துயர சம்பவத்திற்காக தனது போயஸ் கார்டன் இல்லத்தை விற்றுவிட்டாராம். ஆனாலும் சிக்கல்கள் எழுந்ததாம்.

    Advertisement

    வயதான காலத்தில் யாரும் துணைக்கு இல்லாததால் அவர் கஷ்டப்பட்டு கொண்டிருந்ததை பார்த்த ரோட்டரி கிளப் ஆட்கள் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிட்டனராம். அங்கு தங்கும் இடமும், உண்ண உணவும் கிடைக்கிறதாம். ஆனால் மருந்து மாத்திரைகள் வாங்க பணம் இல்லாமல் அவர் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த நிலையில் முதல்வர் விஜய்யுடனும் ஒரு படத்தில் நடித்துள்ள மோகன் சர்மா, அவரை சந்திக்க முயற்சித்து வருகிறாராம். சந்திக்க அனுமதி கிடைத்தால் அவரிடம் மருத்துவ வசதிக்கு உதவி கேட்பார் என தெரிகிறது.

    ஏழை, பணக்காரன் என இன்று பலரும் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் வாழ்க்கை ஒரு வட்டம், எதுவும் நிரந்தரம் இல்லை என்பது மோகன் சர்மாவின் கதையில் இருந்து புரிந்து கொள்ளலாம்.