என் வாழ்க்கையின் கேம் சேஞ்சர் டிக் டாக், இன்ஸ்டாகிராம் தான்.. லுங்கி பாய்ஸ் ராஜ் ப்ரியன் நெகிழ்ச்சி!

  • தூத்துக்குடி: 'சீன்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க வாய்ப்பு அளித்த சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் ஆகியோருக்கு நடிகர் ராஜ் ப்ரியன் நன்றி தெரிவித்துள்ளார். சினிமாவுக்குள் வருவேன் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று கூறிய ராஜ் ப்ரியன், அதற்குக் காரணம் டிக் டாக், இன்ஸ்டாகிராம் என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான 'சீன்' திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி, மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தில் காவல்துறை கதாபாத்திரத்தில் 'லுங்கி பாய்ஸ்' புகழ் ராஜ் பிரியன் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆத்தி யார்ரா இவ' பாடலையும் அவர் எழுதியுள்ளார்.

    Advertisement

    இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சத்தியபாமா திரையரங்கில் 'சீன்' திரைப்படம் திரையிடப்பட்டது. அங்கு வந்த ராஜ் பிரியன் ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது, படம் குறித்தும் தனது நடிப்பு குறித்தும் ரசிகர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ராஜ் ப்ரியன் பேசுகையில், திரையரங்கிற்கு வந்தபோது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு இயக்குநருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சூர்யா அண்ணன் நடித்த படத்தில் நடித்திருக்கிறேன். இது எனக்கு மூன்றாவது படம்.

    Advertisement

    என்னுடைய முகத்தைப் பார்த்து காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி சொல்ல வேண்டும். எனக்கு இந்தக் கதாபாத்திரம் பொருத்தமாக இருந்ததாகப் பலரும் கூறுகின்றனர். திரைப்படம் நல்ல வசூல் செய்து வருவதாகவும் கூறுகின்றனர். இது மகிழ்ச்சியாக உள்ளது. 'சீன்' திரைப்படக் குழுவினர் மிகவும் ஜாலியாக இருந்ததால், எனக்கு நடிப்பதில் சிரமமோ, பதற்றமோ எதுவும் ஏற்படவில்லை.

    மனம் போல் வாழ்வு.. நடிகை நஸ்ரியா வெளியிட்ட பதிவு.. வதந்திகளுக்கு பதிலடி! வாழ்த்தும் ரசிகர்கள்

    புதிய பட வாய்ப்புகள் குறித்து விரைவில் தெரிவிப்பேன். 'சீன்' படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த நடிகர் சூர்யா அண்ணன் மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்ததுதான். சினிமாவுக்கு வருவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

    Advertisement

    அதற்குக் காரணம் டிக் டாக், இன்ஸ்டாகிராம், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்தான். அதன்பிறகு ரசிகர்கள்... நீங்கள் செய்த வேலைதான் என்னை இங்கு தூக்கி உட்கார வைத்திருக்கிறது. அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி என்று தெரிவித்தார்.

    English Summary

    Actor Raj Priyan Thanks Suriya and Director Jithu Madhavan for Police Role in 'Scene' film