Rajkiran: நான் தமிழகத்தில் familiar! எங்கும் தப்பி ஓடிவிடமாட்டேன்! முன்ஜாமீன் கேட்ட நடிகர் ராஜ்கிரண்!

  • சென்னை: தமிழக ரசிகர்களுக்கு நான் பரீட்சயமானவர், எங்கும் தப்பி ஓடிவிடமாட்டேன், எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ராஜ்கிரண் மனு தாக்கல் செய்துள்ளார்.

    Advertisement

    சென்னை மீஞ்சூரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சரவணன் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு திரைப்படத்திற்காக நடிகர் ராஜ்கிரணுக்கு ரூ 50 லட்சம் முன்பணம் தந்திருந்தாராம்.

    Advertisement

    ஆனால் இப்போது வரை படத்தின் பணிகள் தொடங்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பணம் கொடுத்தவர் ராஜ்கிரணிடம் சரவணன் பணத்தை கேட்டுள்ளார். ஆனால் ராஜ்கிரண் வாங்கிய முன்பணத்தை கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் ரூ 10 லட்சத்தை ராஜ்கிரண், சரவணனிடம் கொடுத்தாராம், மீதமுள்ள 40 லட்சம் ரூபாயை ராஜ்கிரண் மோசடி செய்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த சரவணன், மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இதையடுத்து பொன்னேரி நீதிபதி உத்தரவின்படி ராஜ்கிரண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ராஜ்கிரண் தரப்பில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    Advertisement

    அந்த மனுவில், படத் தயாரிப்பு தொடர்பாக 2022 ஆம் ஆண்டு நடந்த ஒப்பந்தத்தில் 4 ஆண்டுகள் கழித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிமையியல் வழக்கான இந்த வழக்கில் குற்றவியல் சாயம் பூசப்படுகிறது.

    தமிழக ரசிகர்களுக்கு நான் மிகவும் பரீட்சயமானவர். நான் எங்கேயும் தப்பி ஓடிவிட மாட்டேன். எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். என தெரிவித்திருந்தார். இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வருகிறது.

    ராஜ்கிரணின் இயற்பெயர் முகைதீன் அப்துல் காதர், "என் ராசாவின் மனசிலே" படத்தில் நடித்த பிறகு தனது பெயரை ராஜ்கிரண் என மாற்றிக் கொண்டார். இவர் திரைத்துறையில் பல ஆண்டுகளாக நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தராகவும் இருந்து வருகிறார்.

    English Summary

    Actor Rajkiran in Chennai hc says that he wont escape to any place in Rs 40 lakhs amount issue.