உதயநிதியை கைது செய்ய வந்த போலீஸ்! பக்கத்து வீட்டில் நின்று வீடியோ எடுத்த விஜய் நண்பர் சஞ்சீவ்!

  • சென்னை: தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    இந்த நிலையில், உதயநிதி வீட்டின் அருகே நடக்கும் அனைத்து சம்பவங்களையும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் தனது வீட்டின் பால்கனியில் இருந்து வீடியோ எடுத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    நீலாங்கரையில் தொடரும் பதற்றம்

    எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நேற்றைய பேச்சு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தஞ்சாவூரில் காவிரி உரிமை தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் பேசிய சில கருத்துகள் எல்லை தாண்டியதாகவும், கண்ணியமற்ற முறையில் அமைந்ததாகவும் புகார்கள் வைக்கப்படுகின்றன.

    உதயநிதி பெண்களை அவமதித்து விட்டதாக கூறி, தமிழக வெற்றி கழகம் மாநிலம் தழுவிய அளவில் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. உதயநிதியின் பேச்சில் சில விஷயங்கள் நாகரிகமற்றது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், தவெக தற்போது கையிலெடுத்துள்ள இந்தப் போராட்ட முறை பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

    Advertisement

    உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் போலீசார் வழக்கு

    காவிரி உரிமைப் போராட்டத்தின் போது தெரிவித்த கருத்துக்களுக்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, கைது நடவடிக்கைகளுக்காகத் துணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் நீலாங்கரையில் அமைந்துள்ள உதயநிதியின் வீட்டை முற்றுகையிட்டனர்.

    அமைச்சர்கள் சேகர் பாபு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுைக தலைவர்கள் வீட்டின் வாசலில் திரண்டு அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கக் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நீலாங்கரை பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.

    Advertisement

    பக்கத்து வீட்டு பால்கனியில் நடிகர் சஞ்சீவ்

    உதயநிதி ஸ்டாலினின் இல்லத்திற்குச் செல்லக்கூடிய அதே பகுதியில் தான் பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகரான சஞ்சீவும் வசித்து வருகிறார். முதல்வர் விஜய்யின் நெருங்கிய கல்லூரி காலத்து நண்பரான சஞ்சீவ், உதயநிதியின் வீட்டிற்கு மிக அருகிலேயே குடியிருந்து வருகிறார்.

    நீலாங்கரை வீட்டின் முன் திரண்டிருந்த ஆதரவாளர்கள், காவல் துறையினரின் வாகனங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அமைச்சர்கள் இடையே நடந்த வாக்குவாதங்கள் என அனைத்து பரபரப்பான சூழல்களையும் நடிகர் சஞ்சீவ் தனது வீட்டின் பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்தபடியே செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருந்துள்ளார்.

    Advertisement

    சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் செய்தி

    முதல்வர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ், உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் நடக்கும் பரபரப்புகளைப் பால்கனியில் இருந்து படம் பிடித்த காட்சி அங்கிருந்த சிலரின் கண்ணில் படவே, அந்த புகைப்படங்களும் தகவல்களும் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

    ஒருபுறம் அரசியல் ரீதியிலான மோதல்களும், கைது முயற்சியும் தீவிரமடைந்து வரும் வேளையில், பக்கத்து வீட்டில் நடக்கும் இந்த பரபரப்பான திருப்பங்களை நடிகர் சஞ்சீவ் தனது பால்கனியில் இருந்து பதிவு செய்திருப்பது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து விவாதப் பொருளாக மாறியுள்ளது.

    English Summary

    Actor Sanjeev Records Video of police outside Udhayanidhi Stalin’s Residence