நாட்டாமை குடும்பம்னு பச்சை குத்திக் கொள்ளுங்கள்! ஆதரவாளர்களுக்கு கிரீன் கார்டு வழங்கிய சரத்குமார்

  • சென்னை: "நாட்டாமை குடும்பம்" என பச்சைக் குத்திக் கொள்ளுமாறு தனது ஆதரவாளர்களுக்கு சரத்குமார் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இவ்வாறு பச்சைக் குத்திக் கொள்வோருக்கு ஒரு ஸ்பெஷல் சலுகையையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    நடிகர் சரத்குமாரின் பிறந்தநாள் விழாவுக்காக பல்வேறு பகுதிகளில் உழைத்த தனது ஆதரவாளர்களுக்கு சென்னை எழும்பூரில் உள்ள ஒரு விடுதியில் விருந்து வழங்கும் நிகழ்வை நடத்தி வைத்தார்.

    Advertisement

    அந்த நிகழ்வில் சரத்குமார் பேசுகையில், "நாட்டாமை குடும்பம்" என பச்சை குத்திக் கொள்வது நமது அடையாளம். நமது குடும்ப அடையாளமாக பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என எண்ணம் தோன்றியது.

    நமது குடும்பத்தில் உள்ளவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு கிரீன் கார்டு போன்ற வழங்கலாம் என நினைத்தேன். ஆனால் பச்சைக் குத்தி கொண்டால் நம் குடும்பமாகிவிடும். நாட்டாமை குடும்பம் என கையில் பச்சை குத்தியிருந்தால் என்னை எளிதில் நேரடியாக சந்திக்கலாம்.

    இது யாரையும் கட்டாயப்படுத்தும் நோக்கில் இல்லை. விரும்பியவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுக் குத்திக் கொள்ளலாம். நானும் பச்சைக் குத்திக் கொள்வேன். ஆனால் இப்போது இல்லை, படப்பிடிப்புகள் முடிந்ததும் குத்திக் கொள்வேன் என சரத்குமார் தெரிவித்தார்.

    Advertisement

    சரத்குமார் பொதுவாகவே அனைவருடனும் நன்கு பழகும் குணம் கொண்டவர். பத்திரிகைத் துறையில் இவர் பணியாற்றியிருந்ததால், மூத்த பத்திரிகையாளர்களை இவருக்கு நன்கு தெரியும். இவர் தனது மகள் வரலட்சுமி திருமணம் முடிந்ததும் பத்திரிகையாளர்களை அழைத்து மகள், மருமகனை அறிமுகப்படுத்தி வைத்து, மதிய உணவு வழங்கினார்.

    அது போல் தனது கட்சி ஆதரவாளர்கள், ரசிகர்கள் என அனைவருடனும் அன்பாக பழகுவார். அவர் முன்னாள் எம்பியாக இருந்தவர். நாடார் சமூகத்தைச் சேர்ந்த சரத்குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார்.

    அந்த கட்சி அதிமுக, மநீமவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த நிலையில் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்து அவரும் பாஜகவில் இணைந்தார். பாஜக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் ராதிகா போட்டியிட்டிருந்தார். ஆனால் தோல்வியடைந்தார்.

    Advertisement

    தற்போது வரை பாஜகவில் எந்த பொறுப்பும் இல்லாமல் இருந்து வருகிறார். இது அவருடைய ஆதரவாளர்களுக்கு ஆதங்கத்தை தருகிறது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தார். விரைவில் அவருக்கு பதவி வழங்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன.

    சரத்குமாரும் மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கட்சி நிகழ்வுகளிலும் சுறுசுறுப்பாக கலந்து கொள்கிறார். இவர் முன்பு ஒரு முறை இலவச சட்ட மையத்தையும் நடத்தி வந்தார்.

    English Summary

    Actor Sarathkumar advises to pierce tatoo to their supporters. Naatamai Kudumbam is the tatoo, if he found this tatoo anyone can meet him at anytime.