சென்னை: என்னையலாம் அழ வைக்கவே முடியாது என்று நடிகர் விமல் பேசியுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. செக் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் விமலிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாதே என்று பதில் அளிக்காமல் நழுவி சென்றார்.
நடிகர் விமல், பிரபு, நடிகை ஆனந்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் மன்னர் வகையறா. இந்த படத்தை நடிகர் விமல்லே தயாரித்திருந்தார். அதற்கான ஃபைனான்சியர் கோபி என்பவரிடம் இருந்து நடிகர் விமல் ரூ.4.5 கோடி கடனான பெற்றிருக்கிறது. இதற்காக விமல் வழங்கிய காசோலை வங்கியில் பணமின்றி திரும்பி இருக்கிறது.
இதையடுத்து அவருக்கு எதிராக சென்னை சிறு வழக்குகள் நீதுமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை 11வது சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்த்தி முன்பாக நடந்தது. இந்த விசாரணையில் நடிகர் விமல் நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது ஃபைனான்சியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காசோலை பணமின்றி திரும்பிய நிலையில், அந்த தொகையை கொடுக்க விமல் முன் வரவில்லை என்று வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்தவும் உத்தரவிட்டார். இது ரசிகர்களிடையே விவாதமாகியது. இதன்பின் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும் விமல் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதன்பின் நடிகர் விமலுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் நடிகர் விமல் ஜனநாயகன் படம் பார்ப்பதற்காக சென்னையில் உள்ள கமலா திரையரங்கம் வந்தார். அப்போது செய்தியாளர்கள் செக் மோசடி வழக்கு தொடார்பாக விமலிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு நடிகர் விமல், மன்னர் வகையறா விவகாரம் பற்றி எதுவும் தெரியாது.. என் மேல செக் மோசடி வழக்கா.. எனக்கு தெரியாது.. என்னலாம் அழ வைக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.