இதுதான் எனது முதல் போராட்டம்! நான் எப்போதும் மாணவர்கள் பக்கம்தான்! நீட் போராட்டத்தில் ஆன்ட்ரியா

  • சென்னை: நான் எப்போதும் மாணவர்களுடன் இருப்பேன் என சென்னையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு வரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் நடிகை ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து நடிகை ஆன்ட்ரியா கூறியதாவது: இதுதான் எனது முதல் போராட்டம். கடந்த வாரம் முதல் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை நான் கவனித்துக் கொண்டே இருக்கிறேன். தூரத்தில் இருந்தாலும் நான் மட்டும் இல்லை. எல்லாருக்குமே இந்த போராட்டம் ஒரு உணர்வுப்பூர்வமானதுதான்!

    Advertisement

    இந்த நேரத்தில் எனக்கு பிடித்த ரவீந்திரநாத் தாகூரின் கவிதையில் இருந்து சில வரிகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மனம் பயமின்றி வாழும் இடமும் மனிதர்கள் சுயமரியாதையோடு தலை நிமிர்ந்து வாழும் இடமும் சுதந்திரம்தான்.

    அனைவருக்கும் அறிவு எவ்விதத் தடையுமின்றி இலவசமாக கிடைத்தால் மட்டுமே உண்மையான சுதந்திரம் என கூறியிருக்கிறார். எனவே கல்வி என்பது நமது பிறப்புரிமை. அதற்காகத்தான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். அந்த கல்வியை அரசாங்கம் நம் மாணவர்களுக்கு வழங்க மறுத்தால், அந்த அரசாங்கம் சரி செய்யப்பட வேண்டும். என்னை அழைத்தமைக்கு நன்றி. நான் எப்போதும் மாணவர்களுடன் இருப்பேன் என ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார்.

    Advertisement

    டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சியினர், நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் டெல்லி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்விலிருந்து முழுவதுமாக ரத்து செய்யக் கோரியும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா.ரஞ்சித், நடிகை ஆன்ட்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    English Summary

    Actress Andriya says that she is always stand with students. She spoke this in Chennai Neet protest which is organised by Pa.Ranjith's Neelam Cultural centre.