ரூ 46 கோடி மோசடி! அம்பிகா அக்கா Phone-ஐ எடுக்கலையே! வீட்டுக்கு போய் 1 வருஷமாச்சு! நடிகை ராதா கண்ணீர்

  • சென்னை: ரூ. 46 கோடி பணமோசடி விவகாரத்தில் எனது போன் காலை என் அக்கா அம்பிகா எடுக்கவில்லை என்றும் வளசரவாக்கம் வீட்டினுள் என்னை விட மாட்டேங்கிறார்கள் என்றும் நடிகை ராதா கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னிடம் இருந்த 5 காசோலை புத்தகங்களை திருடி கிட்டதட்ட 46 கோடி ரூபாய் நிரப்பி , அம்பிகா அக்காவின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    இதை யார் செய்தது என எனக்கு தெரியவில்லை. செக் புக்கில் மோசடி செய்ததால் நான் புகார் கொடுத்திருக்கிறேன். போலீஸ் விசாரணை நடத்துவார்கள். எனது தம்பி மல்லிகார்ஜுன் மீதும் எனக்கு சந்தேகம் இருக்கிறது.

    எனக்கு வளசரவாக்கத்தில் ஒரு வீடு இருக்கிறது. நான் அந்த வீட்டில் இல்லை, அக்காதான் இருந்தார். எனவே நான் வைத்துவிட்டு போன பொருட்களை அவர்கள் எடுத்தார்களா என தெரியவில்லை.

    ராதா கண்ணீர்

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வளசரவாக்கம் வீட்டுக்குள் என்னை விட மாட்டேங்கிறார்கள். அம்பிகா அக்காவின் பெயரில் உள்ள வங்கி கணக்கில்தான் அந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    ஏஆர்எஸ் கார்டன் பாகம் பிரிக்கப்பட்டு அம்பிகா அக்காவுக்கு ஒரு பெரிய பில்டிங் கொடுத்தாகிவிட்டது. இன்னொரு பில்டிங் ஆர்ஆர் கார்டன் என்ற பெயரில் நான் நிர்வகித்து வருகிறேன். அம்பிகா அக்கவுண்ட்டுக்கு அந்த பணம் டெபாசிட் செய்தது குறித்து எனக்கு எஸ்எம்எஸ் வந்ததும் நான் வங்கியில் பேசி அதை நிறுத்திவிட்டேன். அந்த செக் புக்கை நிரப்பியது எனது தம்பி மல்லிகார்ஜுன்.

    ஆனால் யார் அந்த மோசடியில் ஈடுபட்டார்கள் என்பது எனக்கு தெரிய வேண்டும். நான் இல்லாத நேரத்தில் என் வீட்டு மேல்தளத்திற்கு சென்று செக்கை திருடி பண மோசடி செய்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராதா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அம்பிகா அக்காவுக்கு போன் போட்டு கேட்கலாம் என்றால் அவர் போனை எடுக்கவில்லை என்றும் ராதா தெரிவித்துள்ளார்.

    போரூர் ஏஆர்எஸ் கார்டன்

    முன்னதாக அம்பிகா, அவரது தம்பி குறித்து சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் புகாரில் ராதா கூறியிருப்பதாவது: "சென்னை போரூரில் ஏஆர்எஸ் கார்டன் என்ற பெயரில் தொழில் நடத்தி வருகிறேன்.

    தொழில் ரீதியாக நான் அடிக்கடி வெளியூர் செல்லும் போது அவசர தேவைகளுக்காக சில செக் லீஃப்களில் கையெழுத்திட்டு வைத்திருப்பது வழக்கம். 2025 ஆம் ஆண்டு அக்கா அம்பிகாவுக்கு ஏஆர்எஸ் கார்டனில் பாகம் பிரிக்கப்பட்டு ஆர்ஆர் கார்டன் என எனக்கு கிடைத்த பாகத்தில் நான் தொழில் நடத்தி வந்தேன்.

    Advertisement

    பகீர் இமெயில்

    இதுகுறித்து ஐடிபிஐ வங்கிக்கும் உரிய தகவல் அளித்துள்ளேன். இதனால் புதிய செக் புத்தகம் எனக்கு கொடுக்கப்பட்டது. இதனால் பழைய செக் புத்தகத்தை நான் பயன்படுத்துவதில்லை, கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி எனக்கு வங்கியில் இருந்து இமெயில் வந்தது.

    அதில் பயன்பாட்டில் இல்லாத எனது பழைய 5 செக்குகளில் 46 கோடி ரூபாய் அம்பிகா அக்காவுக்கு பணமாக்க வங்கியில் செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்து பணப்பரிமாற்றத்தை நிறுத்த சொல்லிவிட்டேன். இதுகுறித்து வங்கியில் விசாரித்த போதுதான் செக்கை பூர்த்தி செய்ததே எனது தம்பி மல்லிகார்ஜுன் என தெரியவந்தது.

    Advertisement

    தம்பி மீது வழக்கு

    ஏற்கெனவே அவர் மீது பெமா வழக்கு நிலுவையில் உள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் எனக்கு சொந்தமான வீட்டின் தரைதளத்தில் அம்பிகா வசித்து வருகிறார். நான் இல்லாத நேரம் பார்த்து மேல்தளத்தில் எனது அறைக்குச் சென்று திருடி பண மோசடியில் அக்காவும் தம்பியும் ஈடுபட முயன்றனர். அக்கா என நம்பி என் வீட்டில் தங்க வைத்தேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ராதா கோரிக்கை விடுத்துள்ளார்.

    எம்ஜிஆர் திறந்து வைத்தார்

    1980 களில் அம்பிகாவும் ராதாவும் முன்னணி நடிகைகளாக இருந்தனர். அப்போது போரூரில் ஏஆர்எஸ் (Ambika, Radha, Sarasamma (mother)) கார்டன் ஸ்டுடியோ உருவாக்கப்பட்டது. இந்த ஸ்டுடியோ 1983 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி எம்ஜிஆர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Actress Radha gave complaint against Ambika in 46 crore fraudulent, as she is not picking up her call.