சூட்டிங்கில் ராஷ்மிகா மந்தனா இடுப்பில் தீவிர காயம்.. இனி 6 வாரம் ஓய்வு மட்டும் தான்.. என்ன நடந்தது?

  • சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா தனது திருமணத்துக்கு பிறகும் மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார். படப்பிடிப்பில் ரிஸ்க்கான நடனம் மற்றும் சண்டை பயிற்சியில் அவர் ஈடுபட்டு வந்த நிலையில் இடுப்பில் தீவிரமான காயம் ஏற்பட்டுள்ளது. இடுப்பில் தசைநார் பிரிந்துள்ளதாக கூறப்படும் நிலையில் 6 வாரம் வரை ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    Advertisement

    தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்தார். திருமணத்துக்கு பிறகு மீண்டும் ராஷ்மிகா மந்தனா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.

    Advertisement

    ராஷ்மிகா மந்தனா தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரஜாபள்ளி, மைசா உள்பட இன்னும் சில படங்களில் அவர் நடித்து வருகிறது. அதுமட்டுமின்றி 30க்கும் அதிகமான நேஷனல் மற்றும் இன்டர்நேஷனல் பிராண்டுகளுடன் சேர்ந்து அவர் செயல்பட்டு வருகிறார்.

    தற்போது 'மைசா' படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா 'லீட்' ரோலில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ராஷ்மிகா மந்தனாவை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. முதல் முதலாக அவர் ஹீரோ இன்றி தன்னை முன்னிலைப்படுத்தி நடித்து வருகிறார்.

    'பான்' இந்தியா திரைப்படமாக இது உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்குகிறார். இந்த படத்திற்கு . உடல் ரீதியாக மிகுந்த சிரமத்துடன் கூடிய நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் ராஷ்மிகா மந்தனா ஈடுபட்டு வந்தார். சூட்டிங்கின்போது எதிர்பாராத விதமாக அவரது இடுப்பு பகுதியில் தீவிரமான காயம் ஏற்பட்டுள்ளது. இடுப்பின் தசைநார் பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    உடனடியாக அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். காயத்தின் தன்மை தீவிரமாக உள்ளதால் அடுத்த 6 வாரங்கள் வரை அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். நடன இயக்குநராக பிருந்தா மாஸ்டர் செயல்பட்டு வருகிறார். ராஷ்மிகா மந்தனா சிறப்பாக நடனம் ஆடுவதாக அவர் புகழ்ந்து பேசியிருந்த மறுநாளில் தற்போது அவர் காயமடைந்துள்ளார்

    இதனால் ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். இந்த காயம் காரணமாக ரஷ்மிகா மந்தனாவின் அடுத்தககட்ட படப்பிடிப்புகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுடனான விளம்பர மற்றும் நிகழ்ச்சி சார்ந்த ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனாவின் காயம் பற்றி அவர் தரப்பிலும், படக்குழு தரப்பிலும் இன்னும் எந்த விளக்கமும் தரப்படவில்லை.

    English Summary

    Actress Rashmika Mandanna has resumed acting. While participating in risky dance sequences and stunt training for a shoot, she sustained a severe hip injury. Doctors have advised her to rest for six weeks, as the injury reportedly involves a torn ligament in her hip.