Actress Trisha: சென்னையில் சுதந்திர தின நிகழ்ச்சி.. முதல் வரிசையில் திரிஷா! முதல்வர் விஜய்யின் பெற்றோர் பங்கேற்பு

  • சென்னை: சென்னை கோட்டை கொத்தளத்தில் நடக்கும் சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷாவுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டுள்ளார். முதல்வர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோர் அருகே நடிகை த்ரிஷா அமர்ந்துள்ளார்.

    Advertisement

    நாட்டின் 80 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் விஜய் தேசியக்கொடி ஏற்றுகிறார். முதல் முறையாக விஜய், கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி உரை நிகழ்த்த உள்ளார்.

    Advertisement

    முதல் வரிசையில் திரிஷா

    காலை 8.45 மணிக்கு முதல்வர் விஜய் கொடியேற்றிவிட்டு, உரை நிகழ்த்த உள்ளார். வீரர்களின் அணிவகுப்பையும் பார்வையிடுவார். செயிண்ட் ஜார்ஜ் கோட்டை எதிரே முதல்வர் விஜய் அமர மேடை அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் வருகை தந்து இருந்தனர். பார்வையாளர்கள் பகுதியில் முக்கிய பிரமுகர்களும் அமர வைக்கப்பட்டு இருந்தனர்.

    விஜய்யின் தந்தை சந்திரசேகர், தாயார் சோபா சந்திரசேகர் உள்ளிட்டோரும் முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டு இருந்தனர். நடிகை திரிஷாவும் அவரது தாயாருடன் கலந்து கொண்டார். முதல் வரிசையில் சந்திரசேகர் அருகிலேயே திரிஷா அமர்ந்து இருந்தார். விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    பதவியேற்பு விழாவிலும்

    விஜய்யுடன் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ள திரிஷா, விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிலும் முதல் வரிசையில் அமர்ந்து விஜய் பதவியேற்பை திரிஷா பார்த்து ரசித்தார். விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகர் அருகே அந்த விழாவில் திரிஷா அமர்ந்து இருந்தார்.

    தற்போது சுதந்திர தின விழாவிலும் திரிஷா பங்கேற்று இருப்பது பேசுபொருளாகியுள்ளது. திரிஷா சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை காண வருகை தந்து இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சுதந்திர விழா கொண்டாட்டத்தை பார்வையிட அமைச்சர்கள் சிலர் தங்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்று இருந்தனர்.

    Advertisement

    கோட் சூட் அணிந்து விஜய் பங்கேற்பு

    முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக அவர் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுவதால் அதைக்காண பொதுமக்களும் அதிக அளவில் வருகை தந்து இருந்தனர். முதல்வர் விஜய் வழக்கம் போல கோட் சூட் அணிந்து இந்த விழாவில் பங்கேற்றார். விஜய் காவல்துறை அணிவகுப்பை பார்வையிட திறந்த ஜீப்பில் வருகை தந்த போது, அவரை பார்த்து மக்கள் உற்சாகமாக கை அசைத்தனர்.

    English Summary

    Actress Trisha has been allocated a seat in the front row at the Independence Day celebrations held at the ramparts of Fort St. George in Chennai. She is seated next to Chief Minister Vijay's parents, S.A. Chandrasekar and Shoba.