கோவையில் நடிகை திரிஷா ரோடு ஷோ.. திறந்த காரில் நின்றபடி சென்றதால் ரசிகர்கள் உற்சாகம்!

  • கோவை: கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த நடிகை திரிஷா, காந்திபுரத்தில் திறந்தவெளி காரில் நின்றபடி ரோடு ஷோவாக சென்றார். திரிஷாவை பார்த்த உற்சாகத்தில் அவரது ரசிகர்கள் வாகனத்தை சூழந்து கொண்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனினும் தன்னை பார்க்க கூடியிருந்த ரசிகர்களை பார்த்து நடிகை திரிஷா கையசைத்தபடியும், ஹர்ட்டின் சிம்பிளும் காட்டியபடியும் திறந்த காரில் பயணித்தார்.

    Advertisement

    சில ரசிகர்கள் திரிஷாவிற்கு பேட், ஆடைகள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து அவரிடம் அளிக்க முயற்சித்தனர். கோவையில் திரிஷா ரோடு ஷோ சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    Advertisement

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் தற்போது படப்பிடிப்புகளில் பிசியாக உள்ளார். படப்படிப்புகளுக்கு மத்தியில், நடிகை திரிஷா இன்று கோவையில் உள்ள தனியார் மொபைல் நிறுவனத்தின் கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்தார். கோவை காந்திபுரத்தில் உள்ள அந்த கடை திறப்பு விழாவிற்கு நடிகை திரிஷா கலந்து கொள்ளதாக தகவல் கிடைத்ததும் அங்கு நூற்றுக்கணக்கான அவரது ரசிகர்கள் திரண்டனர்.

    திரிஷா ரோடு ஷோ

    ரசிகர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த திரிஷா, அங்கு ரோடு ஷோவாகவும் சென்றார். திறந்த காரில் நின்ற படி திரிஷா தனது ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். திரிஷாவை பார்த்த மகிழ்ச்சியில் அவரது ரசிகர்களும் உற்சாகமாக திரிஷா.. திரிஷா.. என சத்தம் எழுப்பினர்.

    Advertisement
    அரசியலுக்கு வருவீங்களா? தனுஷ் போல திரிஷா கொடுத்த ரியாக்ஷன்.. உள்குத்து இருக்கு போல!

    திரிஷாவிற்கு பேட், ஆடைகள் உள்ளிட்டவற்றையும் ரசிகர்கள் கொண்டு வந்து அவரிடம் அளிக்க முயற்சித்தனர். திரிஷாவை பார்க்க கூட்டம் அலைமோதியதால் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. திரிஷாவை பார்த்த மிகுதியில் ரசிகர்கள் முண்டியடித்ததால், அங்கு லேசான தள்ளுமுள்ளு சூழலும் ஏற்பட்டது. நடிகை திரிஷா வருகை தருவதாகவும் அதற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மொபைல் கடை நிர்வாகம் தரப்பில் முன்கூட்டியே அனுமதி கோரப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    கடும் போக்குவரத்து நெரிசல்

    திரிஷா வருகையின் போது அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழக அரசியல் களத்தில் எண்ட்ரி கொடுக்க சினிமா பின்னணி கொண்டவர்கள் பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், கோவையில் தனியார் நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்த திரிஷா திடீரென ரோடு ஷோவாக சென்று இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    அரசியலுக்கு வருகிறேனா? திரிஷா பதில்

    திரிஷா ரோடு ஷோ சென்ற காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமீபகாலமாக நடிகை திரிஷாவை அரசியலுக்கு வரவேற்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. முதல்வர் விஜய்யுடன் பொது நிகழ்ச்சிகளில் அவ்வப்போது திரிஷா பங்கேற்று வரக்கூடிய சூழலில், திரிஷாவை அரசியலுக்கு வரவேற்று அவரது ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் அரசியல் களத்திலும் கவனம் ஈர்த்தது.

    எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் திரிஷா..! ஹீரோ யார் தெரியுமா? வெளியான அப்டேட்

    இந்த சூழலில்தான், கோவை விமான நிலையத்தில் நடிகை திரிஷாவிடம் செய்தியாளர்கள், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீங்களா? என்று கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு திரிஷா, எந்த பதிலும் சொல்லாமல் சிரித்தபடியே அங்கிருந்து சென்று விட்டார்.

    English Summary

    Actress Trisha, who arrived in Coimbatore for a private event, took part in a roadshow in Gandhipuram. Fans, excited to see her, surrounded her vehicle, leading to severe traffic congestion. Standing in an open-top car, Trisha acknowledged the gathered fans by making a heart-shaped gesture with her hands.