தீபாவளி.. சென்னையில் இருந்து புறப்படும் 10 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு.. ரயில்வே

  • சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து புறப்படும் 10 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்திலிருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16101), இன்று (5-ந்தேதி) மற்றும் 10 ஆகிய தேதிகளிலும், சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16159), இன்று (5-ந்தேதி) முதல் 7-ந்தேதி வரையிலும், கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளது.

    Advertisement

    தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட இருக்கிறது.. அதன் விவரம் வருமாறு:-

    Advertisement

    சென்னை சென்ட்ரல் - கோவை இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்.12243/12244), வருகிற 6, 7, 9, 11 ஆகிய தேதிகளில் கூடுதலாக ஒரு இருக்கை வசதி கொண்ட பெட்டி இணைத்து இயக்கப்பட இருக்கிறது.

    தாம்பரத்திலிருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16101), இன்று (5-ந்தேதி) மற்றும் 10 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16102), வருகிற 6, 11 ஆகிய தேதிகளிலும் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்பட இருக்கிறது..

    Advertisement

    சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (20635), இன்று (5-ந்தேதி) மற்றும் 12 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (20636), வருகிற 6, 13 ஆகிய தேதிகளிலும் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்பட இருக்கிறது..

    தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16866), வருகிற 11-ந்தேதி வரையிலும், சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16865), வருகிற 7, 11 ஆகிய தேதிகள் வரையிலும் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்பட இருக்கிறது..

    Advertisement

    சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16159), இன்று (5-ந்தேதி) முதல் 7-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, மங்களூரு சென்ட்ரலில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16160), வருகிற 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையிலும் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்பட இருக்கிறது..

    தாம்பரம்- ராமேஸ்வரம்எக்ஸ்பிரஸ் ரயிலில் (16103), வருகிற 10-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, ராமேஸ்வரம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16104), இன்று (5-ந்தேதி) முதல் 10-ந்தேதி வரையிலும் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்பட இருக்கிறது.

    Advertisement

    சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம்எக்ஸ்பிரஸ் ரயிலில் (16751), வருகிற 8-ந்தேதி வரையிலும், ராமேஸ்வரம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16752), வருகிற 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையிலும் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்பட இருக்கிறது..

    சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் (22639), இன்று (5-ந்தேதி), 6, 8, 9 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக, ஆலப்புழா-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயிலில் (22640), வருகிற 6, 7, 9, 10 ஆகிய தேதிகளிலும் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்பட இருக்கிறது..

    சென்னை சென்ட்ரல்-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் (12007), வருகிற 10, 11 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக, மைசூர்-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயிலில் (12008), வருகிற 10, 11 ஆகிய தேதிகளிலும் கூடுதலாக ஒரு இருக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்பட இருக்கிறது.

    Advertisement

    ராமேசுவரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் (16780), வருகிற 6, 8, ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக, திருப்பதி-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16779), வருகிற 7, 9 ஆகிய தேதிகளிலும் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்பட இருக்கிறது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    In view of the Deepavali festival, Southern Railway has announced that additional coaches will be attached to 10 express trains departing from Chennai. Extra coaches will be added to the Tambaram–Kollam Express (16101) on the 5th (today) and 10th of this month, and to the Chennai Egmore–Mangaluru Central Express (16159) from the 5th (today) through the 7th of this month.