ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்!

  • விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு உள்கட்டமைப்பு மற்றும் பொதுப்பணித் துறையில் இதுவரை இல்லாத அளவிலான ஒரு மாபெரும் தொலைநோக்கு அடிப்படையில் முக்கியமான மாற்றத்தை செய்ய உள்ளது. அரசு அலுவலகங்கள் இனி ஐடி அலுவலகம் போல் பிரம்மாண்ட கட்டங்களாக கட்டப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    Advertisement

    இனிவரும் காலங்களில் கட்டப்படவுள்ள அனைத்து புதிய அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் அனைத்தும் தற்போதைய தேவையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், எதிர்காலத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு திட்டமிடப்படும் என்று தமிழகப் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடியாக அறிவித்துள்ளார்.

    Advertisement

    குறிப்பாக நிலத்தின் மதிப்பு அதிகமாக உள்ள நகரப் பகுதிகளில், பழைய மாடலில் மிகக் குறைந்த தளங்களைக் கொண்ட கட்டிடங்களைக் கட்டுவது அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதுடன், நிலத்தையும் வீணடிக்கும் என்பதால், புதிய உத்திகளைத் தமிழக அரசு கையில் எடுக்க உள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

    சிறிய கட்டிடங்களுக்கு குட்பை

    நகர்ப்புறங்களில் நிலத்தின் விலை விண்ணைத் தொட்டு வரும் தற்போதைய பொருளாதாரச் சூழலில், தரைத்தளத்துடன் சேர்த்து இரண்டு அல்லது மூன்று தளங்களை (G+2 or G+3) மட்டுமே கொண்டு குறைந்த உயரங்களை கொண்ட கட்டிடங்களைக் கட்டுவது மூலம் நகர்ப்புற நிலத்தின் மதிப்பை குறைக்கும் விதமாக உள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சுட்டிக்காட்டியுள்ளார்.

    Advertisement

    இதை தடுக்கும் விதமாக எதிர்காலத் தேவைகளை முழுமையாகச் பூர்த்தி செய்யும் நோக்கில், சாதகமாக உள்ள அனைத்து இடங்களிலும் தரைத்தளத்துடன் 15 தளங்கள் வரை கொண்ட (G+15 buildings) பிரம்மாண்ட அடுக்குமாடி அரசு கட்டிடங்களாக கட்டுவது குறித்து அரசு மிகவும் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் ஒரே இடத்தில் பல அரசுத் துறைகளை ஒருங்கிணைக்க முடியும்.

    அடுத்த 40 ஆண்டுகால திட்டம்

    அரசின் இந்த அதிரடி மாற்றுத் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் (Housing quarters) மற்றும் இதர அரசு வசதிகள் அனைத்தும் அடுத்த 40 ஆண்டுகால உள்கட்டமைப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டே பிரத்யேகமாக வடிவமைக்கப்படும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

    Advertisement

    தமிழக அரசு இனிவரும் காலங்களில் 'எஃப்எஸ்ஐ' (FSI - Floor Space Index) எனப்படும் அடுக்குமாடி கட்டுமானப் பரப்பு குறியீட்டை உயர்ந்த அளவில் பயன்படுத்த உள்ளது உறுதியாகியுள்ளது.

    English Summary

    The Tamil Nadu government has announced plans to construct modern high-rise government offices and staff quarters up to G+15 floors, designed like IT parks, to optimize prime urban land and meet infrastructure needs for the next 40 years. This forward-looking initiative focuses on efficiency, multi-department integration, and higher Floor Space Index utilization.