TN Bypoll: தவெக Star Campaigners செலவில் சட்டச் சிக்கல்! அதிமுக இன்பதுரை சொல்லும் சட்டவிதிமீறல்!

  • சென்னை: பிறக் கட்சிகளின் தலைவர்களான வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரை தவெகவின் நட்சத்திர பேச்சாளர்களாக அறிவித்திருப்பது எதன் அடிப்படையில் என அதிமுக எம்பி இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் தனித்தனி அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருக்கும் நிலையில், அவர்கள் மற்றொரு கட்சியான TVK-யின் Star Campaigners பட்டியலில் இடம்பெற்றிருப்பது எந்த சட்ட அடிப்படையில்?

    Advertisement

    R.P. Act, 1951 - Section 77(1) மற்றும் ECI வழிகாட்டுதலின்படி, ஒரு கட்சி Star Campaigner ஆக தனது சொந்த கட்சியின் உறுப்பினரையே நியமிக்க முடியும்.

    மேலும், Star Campaigners பட்டியல் தேர்தல் அறிவிப்பிலிருந்து 7 நாட்களுக்குள் ECI/CEO-க்கு தெரிவிக்கப்பட வேண்டும். தற்சமயம் அந்த காலக்கெடு முடிந்துவிட்ட பிறகு, இனி இவர்கள் தத்தமது கட்சிகளின் சார்பில் புதிதாக விண்ணப்பித்து தங்கள் பெயரில் அனுமதி பெற்று Section 77-ன் செலவு விலக்கைப் பெற முடியாது.

    தங்களது சொந்த கட்சித் தலைவர்களாக / கூட்டணிக் கட்சி தலைவர்களாக TVK வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய இவர்கள் அனுமதிக்கப்பட்டால், Star Campaigner செலவு விலக்கு இனி இவர்களுக்கு பொருந்தாதது.

    Advertisement

    எனவே, ECI விதிகளின்படி இவர்களின் சம்பந்தப்பட்ட உரிய பிரச்சாரச் செலவுகள் மொத்தமும் TVK வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே சட்டம்.

    T. Paulraj v. Election Commission of India (Madras HC) வழக்கில் ECI இதைத்தான் வலியுறுத்தியது.

    இவர்களின் பிரச்சார செலவுகள் TVK வேட்பாளர்களின் கணக்கில் அவ்வாறு சேர்க்கப்படாமல் இருந்தாலோ, இதன்மூலம் TVK வேட்பாளர்களின் சட்டபூர்வ தேர்தல் செலவு வரம்பு மீறப்பட்டாலோ, R.P. Act, 1951 - Section 123(6) கீழ் corrupt practice என்பதே தெளிவான சட்டநிலை! இவ்வாறு இன்பதுரை தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இது போல் பாஜகவும் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் - CEO TN, வெளியிட்டுள்ளது.

    இந்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் தமிழக வெற்றிக்கழகத்தினுடைய நட்சத்திர பேச்சாளர்களாக தமிழக முதல்வர் விஜய், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காதர் மொகிதீன், விசிக கட்சியைச் சார்ந்த ரவிக்குமார் MP, வன்னியரசு மற்றும் சிந்தனை செல்வன் போன்ற பிற கட்சிகளின் தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    Advertisement

    நட்சத்திர பேச்சாளர்களை பொருத்தவரை அந்தந்த கட்சியை சார்ந்த தலைவர்களை மட்டுமே நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்க முடியும் என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தினுடைய பிரிவு 77 ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி சட்டத்தினுடைய பிரிவு தெளிவாக குறிப்பிட்டு இருக்கும்போது, தமிழக தேர்தல் ஆணையம் - CEO TN, தவெக கொடுத்துள்ள 40 பேர் கொண்ட நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் பிற கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய பேர்களைக் கொண்ட அந்த பட்டியலை தமிழக வெற்றி கழகத்தினுடைய நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரித்துள்ளது.

    இது தமிழக தேர்தல் ஆணையம் CEO TN மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கேலிக்கூத்தாக்கும் செயலாக உள்ளது. சட்டத்தின்படி நடக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தையும் சட்டத்தையும் கேலிக்கூத்தாக்கி ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் நடைபெறக்கூடிய மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுமா என்ற கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    ஏற்கனவே இதே போன்று ஆம் ஆத்மி கட்சி அதன் உறுப்பினர் அல்லாதவரை நட்சத்திர வேட்பாளராக அறிவித்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்து, பிறகு கட்சியின் உறுப்பினர் அல்லாதவர் நட்சத்திர பேச்சாளராக இருக்க முடியாது என்ற நிலை உருவானது. எனவே உடனடியாக தமிழக தேர்தல் ஆணையம் - CEO TN தமிழக வெற்றி கழகத்திற்கு 2026 மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக தமிழக வெற்றிக்கழகத்திற்கு அங்கீகரித்துள்ள நட்சத்திர பேச்சாளர் பட்டியலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    English Summary

    ADMK MP Inbadurai says that other parties leaders in TVK star campaign list is against to R.P. Act, 1951.