மதுராந்தகம், தாராபுரம் தபால் வாக்குகள்! 3வது இடத்தில் அதிமுக! என்ன செய்ய போகிறார் எடப்பாடி பழனிசாமி?

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்குகளில் அதிமுகவுக்கு மூன்றாவது இடமே கிடைத்துள்ளது. அரசு ஊழியர்கள் அதிகம் ஓட்டு போடும் தபால் ஓட்டுகளிலேயே இரு தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்து வருகிறது.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. இதில் மதுராந்தகத்தில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், மார்க்சிஸ்ட் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன், சுயேச்சைகள் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மதுராந்தகத்தில் 86.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

    Advertisement

    இந்த தேர்தலுக்கான வாக்குப் ப பதிவு இயந்திரங்கள் செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள சமூக பண்பாட்டு மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

    தாராபுரம்

    அது போல் தாராபுரத்தில் திமுக சார்பில் சுகன்யா, தவெக சார்பில் சத்தியபாமா, அதிமுக சார்பில் பானுமதி, நாதக சார்பில் கார்த்திகா, கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணன், சுயேச்சைகள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 80.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பூர் எல்ஆர்ஜி மகளிர் கலைக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

    Advertisement

    அனைத்து வேட்பாளர்கள்

    இன்று காலை அனைத்து கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் இரு தொகுதிகளின் ஸ்ட்ராங் ரூம்களும் திறக்கப்பட்டன. இதையடுத்து சரியாக காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கின.

    தபால் வாக்குகள்

    அந்த வகையில் மதுராந்தகத்தில் 893 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. அவை எண்ணும் பணிகள் நடந்து முடிந்தன. அதில் தவெக முன்னிலை வகித்துள்ளது.

    தாராபுரம் தபால் வாக்குகள்

    அது போல் தாராபுரத்தில் 1406 தபால் வாக்குகள் பதிவாகின. இதிலும் தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை வகித்து வருகிறார். இந்த இரு தொகுதிகளின் தபால் வாக்குகளின் முடிவுகள், வாக்கு பதிவு இயந்திர எண்ணப்பட்டு அதன் கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்று இருக்கும் போது வெளியாகும்.

    Advertisement

    அரசு ஊழியர்கள்

    இரு தொகுதிகளிலும் அரசு ஊழியர்கள் அதிகம் ஓட்டு போடும் தபால் ஓட்டுகளிலேயே தவெக முன்னிலை வகித்து வருகிறது. மதுராந்தகமும், தாராபுரமும் அதிமுகவின் கோட்டை என சொல்லப்பட்ட நிலையில் அங்கு அதிமுக 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    11 மணிக்கு நிலவரம்

    எனவே அரசு ஊழியர்களின் ஆதரவு தவெகவுக்கு இருப்பது தெரிகிறது. தற்போது வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மக்கள் யாருக்கு ஆதரவு கொடுத்துள்ளார்கள் என்பது 11 மணிக்கு தெரியவந்துவிடும்.

    கடந்த முறை

    கடந்த தேர்தல்களில் மதுராந்தகத்தில் திமுக மூன்றாவது இடத்திற்கு சென்றது. தாராபுரத்தில் திமுக இரண்டாவது இடத்திற்கு சென்றது. இந்த முறை மூன்றாவது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டு வருவது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    அதிமுக அதிருப்தி

    இதே நிலை வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் நீடித்தால் அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்கள் அணி மாறும் நிலை ஏற்படலாம். அதிமுகவின் பலம் வீழ்ச்சியடைகிறதா என்ற விமர்சனங்கள் எழும்.

    எடப்பாடி பழனிசாமி

    ஏற்கெனவே பல தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தோல்வி அடைந்துள்ள நிலையில் தற்போது அவரை பதவியில் இருந்து விலகுமாறு போர்க் கொடி எழுப்பக் கூடும். கட்சி பிளவுப்படும். மீண்டும் சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் இணைக்க வேண்டும், ஒருங்கிணைந்த அதிமுக என்பதற்கான குரல்கள் எழும். எனவே தற்போது வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதன் முடிவுகள் யாருக்கு சாதகம் என்பதை பார்க்கலாம்.

    English Summary

    ADMK is in third place even in Postal ballots in both Maduranthagam and Dharapuram which is back fire for General Secretary Edappadi Palanisamy.