அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்?

  • சென்னை: அதிமுகவின் 3 எம்எல்ஏக்கள் நேற்று தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். தலைமை செயலகத்தில் வைத்தே அவர்கள் 3 பேரும் தவெகவில் இணைந்தனர். அதன் தொடர்ச்சியாக அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கிசுப்பையாவும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா மூலம் தவெகவில் இணைவதற்கு மேலும் சில அதிமுக எம்எல்ஏக்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    Advertisement

    சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜய பாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். தவெகவுக்கு ஆதரவளித்தனர். திமுகவின் ஆதரவுடன் எடப்பாடி முதல்வராகும் கனவும் நடைபெறவில்லை. அமைச்சரவையில் இடம்பெறும் வேலுமணி அணியின் முயற்சியும் நடைபெறவில்லை. வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் எடப்பாடி அணியிலும், தவெகவிலும் இணைந்து வருகிறார்கள்.

    Advertisement

    அனைத்து பிரச்சனைகளும் சரியாகி எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, சி.வி.சண்முகம் அணி இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்குள் புதிய பிரச்சனை வெடித்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி அணியா, வேலுமணி அணியா என்கிற பஞ்சாயத்தில் இருவரும் வேண்டாம் என்கிற நிலையில் அதிமுகவில் பல எம்எல்ஏக்கள் இருக்கிறார்களாம்.

    இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி கூறுகையில், ஊழல் வழக்குகள் உள்ள வேலுமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரை தவெக விரும்பவில்லை. அவர்கள் தவிர சுமார் 10 முதல் 15 எம்எல்ஏக்கள் தவெக பிடியில் உள்ளனர். அடுத்தடுத்து அவர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணையவுள்ளனர். தவெக பெரும்பான்மையை நிரூபிக்க அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறார்கள்.

    Advertisement

    இடைத்தேர்தலில் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்" என்றார். அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா இருவர் மூலம் தான் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருவரும் அதிமுக எம்எல்ஏக்களிடம் பேசி அவர்களுக்கான பதவி, எதிர்காலம் குறித்து உறுதியளித்து வருகிறார்கள். அதனடிப்படையில் தான் கட்சி தாவல்கள் நடைபெறுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    English Summary

    ADMK MLA Resignation: Operation ADMK. Minister Sengottaiyan Adhav Arjuna assignment to shift ADMK MLA’s for TVK.