விருதுநகர்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அதிமுகவில் இருந்து மேலும் 15 எம்எல்ஏக்கள் தவெக செல்லவுள்ளதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்நிலையில் விஜய்க்கு ஏழை மக்களை பற்றிய சிந்தனை இருப்பதில்லை. அவர் மாலை 6 மணிக்கு மேல் வெளியில் வருவதில்லை என்று ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
விருதுநகரில் அதிமுக 55வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், "மக்கள் மனதில் நிற்க கூடியளவுக்கு தலைவர்கள் பணியாற்ற வேண்டும். ஏழைகளை பற்றி சிந்திக்காதவன் நிச்சயமாக இறைவனின் அருளை பெற முடியாது. இன்றைக்கு இந்த ஆட்சியில் உள்ள யாருமே ஏழைகளை பற்றி சிந்திப்பதில்லை. சந்தர்ப்பத்தால் விதிவிலக்கால் ஆட்சிக்கு வந்தனர். விதியே கதி என்று விஜய் உள்ளார். மாலை 6 மணிக்கு மேல் அவர் வெளியில் வருவதில்லை.
மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டில் படுத்து உறங்குகிறார். பகலில் ரீல்ஸாக போட்டு தள்ளுகிறார். ஒரு நடிகர் எங்கே போனாலும் அவரை பார்க்க கூட்டம் வராதா. ரஜினிகாந்த் நடித்த ஜெயலிர் 2 படம் ரூ.1,000 கோடி வசூல் எடுக்கும் என்கிறார்கள். படத்தை பாருங்க. ரசிங்க. முதலமைச்சர் என்று வரும்போது, அந்தப் பதவியில் யாரை அமர வைக்க வேண்டும் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். உங்கள் சிந்தனையில் ஒருமுறை தவறு செய்தால் அடுத்த 5 ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும். அடுத்த தேர்தல் வரை எதுவும் செய்ய முடியாது. எடப்பாடி பழனிசாமி உன்னதமான தலைவர். சென்னையில் வர்தா புயல் வந்தது. அன்றைக்கு சென்னை மக்களை காப்பாற்றியது அதிமுக ஆட்சி. கஜா புயல் வந்து டெல்டாவின் 10 மாவட்டங்களை புரட்டி போட்டது. தென்னந்தோப்பு, வாழை தோப்பு முற்றிலும் அழிந்தது. உயிர்பலி இல்லாமல் மக்களை பாதுகாத்த தலைவர் எங்கள் அண்ணன் எடப்பாடியார். பிரச்சனை, இயற்கை பேரிடர் வரும்போது தமிழக மக்களை பாதுகாக்க வேண்டும். அவர் தான் தலைவர். முதலமைச்சராக இருக்க கூடியவர்கள் மக்களை சந்தித்து அவர்கள் வாழ்க்கை தரம் உயர பாடுபட வேண்டும். இதில் எதையாவது ஒன்றை விஜய் செய்கிறாரா. தினசரி வேடிக்கை, விளையாட்டு நடைபெறுகிறது. முன்னாடியும், பின்னாடியும் 4 கார்கள், 2 அமைச்சர்கள் செல்கிறார்கள். டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, சென்னை ஏர்போர்ட், மவுன்ட் ரோடு எங்கே போனாலும் ரீல்ஸ் தான். என்ன நடக்கிறது தமிழகத்தில். இப்படியே சென்றால் அரிசி தட்டுப்பாடு வந்துவிடும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது அரிசி பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சாப்பில் சென்று அரிசி வாங்கி நிலைமையை சரி செய்தார். அரிசி பஞ்சம் இல்லாத ஒரு நிலையை உருவாக்கியவர் அவர். முதலமைச்சர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடப்பாடியார் தான் உதாரணம். எப்படி இருக்க கூடாது என்பதற்கு விஜய் உதாரணம்" என்றார்.மாலை 6 மணிக்கு மேல்
எங்கு பார்த்தாலும் ரீல்ஸ்