சென்னை: கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்கிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் தவெக அரசு மெத்தனமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவெகவுக்கு எதிராக அதிமுக நடத்தவுள்ள முதல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை புறக்கணிப்பதாக வேலுமணி அணி கூறியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. திமுக ஆதரவில் ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சித்ததாக கூறி, வேலுமணி, சி.வி சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தவெகவுக்கு ஆதரவளித்தனர். வேலுமணி, சண்முகம், நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களின் கட்சி பதவியை எடப்பாடி பறித்தார்.
இதில் அதிருப்தியான முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் தவெகவுடன் நெருக்கமாக இருந்தாலும் அதிமுகவில் இருந்தபடியே எடப்பாடிக்கு நெருக்கடி கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி அறிவித்த கட்சி பதவிகளை ஏற்க மாட்டோம் என கூறிவிட்டனர். கட்சி நிகழ்ச்சிகளில் பெரிதாக கலந்து கொள்ளாமல் உள்ளனர். சசிகலா, டி.டி.வி தினகரன் ஆகியோரை கட்சியில் இணைக்க வேண்டும், பழைய பதவிகள் கொடுக்க வேண்டும், கட்சியில் இருந்து நீக்கியவர்களை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேகாதாது விவகாரத்தில் கர்நாடகா அரசு மற்றும் தமிழகத்தின் உரிமைக்கு போராட்டம் நடத்த மறுப்பாக தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூரில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதேபோல அந்தந்த மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தங்களின் மாவட்டத்தில் பொறுப்பு கொடுக்காமல், வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு பொறுப்பு வழங்கியதால் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என வேலுமணி அணி அறிவித்துள்ளது.அதிமுக ஆர்ப்பாட்டம்
சமாளிப்பாரா எடப்பாடி