இந்த முறை.. சென்னை வெள்ளம் கண்டிப்பா வரும்! ஆட்சியாளர்கள் மெத்தனத்தால் ஏற்படப்போகும் பேரிடர்!

  • சென்னை: இது எல்-நினோ ஆண்டு என்பதால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், மழையின் வடிகாலாக இருக்கும் அடையாறு ஆறு தூர்வாரப்படாமல் இருப்பதால், சென்னை பெரிய வெள்ள பாதிப்பை எதிர்கொள்ளும் என்று சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    Advertisement

    கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட அதிகப்படியான நீர் இந்த வெள்ளத்திற்கு காரணமாக இருந்தாலும், வெள்ளத்தை வெளியேற்ற வடிகால்களாக இருந்த அடையாறு போன்ற ஆறுகள் சரியாக தூர் வாரப்படாமல் இருந்ததும் முக்கிய காரணமாகும்.

    Advertisement

    எனவே இந்த வெள்ள பாதிப்பை பாடமாக எடுத்துக்கொண்ட தமிழ்நாடு அரசு, அடுத்தடுத்த ஆண்டுகளில் அடையாறு ஆற்றை தூர்வாரி, இரு கரைகளையும் பலப்படுத்தியிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஆண்டு வடமேற்கு பருவமழை தொடங்கிய பின்னரும் கூட.. தற்போது வரை அடையாறு ஆறு தூர் வாரப்படாமல் இருக்கிறது.

    ஆற்றின் கரையோரம் கருவேல மரங்கள் அதிகப்படியாக வளர்ந்து, புதர் மண்டி இரு பக்கமும் கரைகளை ஆக்கிரமித்திருக்கின்றன. எனவே இதை உடனடியாக அகற்றி, ஆற்றின் கரையை பலப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

    Advertisement
    கர்நாடகா கைவிட்டாலும்.. காவிரி விடாது! டெல்டா விவசாயிகள் ஹேப்பி! மேட்டூருக்கு துள்ளி வரும் வெள்ளம்!

    அதேபோல கடந்த ஆண்டு, இந்நேரத்திற்கெல்லாம் சென்னையில் வடிகால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்த முறை பருவமழை தொடங்கி 2 நாட்கள் ஆகிவிட்டது. இன்னமும் வடிகால் பணிகள் முடிக்கப்படவில்லை. எல்-நினோ ஆண்டு என்றால், வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யும் என்று அர்த்தம். சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே வெள்ள பாதிப்பு ஏற்பட இருக்கிறது. அதற்கு முன்பாகவே வடிகால் பணிகள், அடையாறு, கூவம் மற்றும் கொசஸ்தலை ஆறுகளை தூர் வாரி, கரைகளை பலப்படுத்தினால் வெள்ள பாதிப்பிலிருந்து மீள முடியும் என சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

    Advertisement

    சென்னையின் வானிலை

    தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வார காலமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகியிருக்கிறது. நேற்று சென்னையில் நல்ல மழை பெய்திருந்தது. அதேபோல இன்று சென்னைக்கு மேல் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

    English Summary

    Adyar River: As this is an El Niño year, it is predicted that the impact of the Northeast monsoon in Tamil Nadu will be intense. Given this, environmentalists have warned that Chennai could face severe flooding, as the Adyar River—which serves as a drainage channel for rainwater—has not been desilted.